Advertisement

Friday, July 1, 2016

எனது காமெடி எல்லாம் கவுண்டமணிக்கு பிடிக்காது - வெளிபடையாக பேசிய விவேக்

இன்று பிரபல நாளிதழுக்கு இன்றைய காமெடி நடிகர்களை பற்றி நடிகர்விவேக் பேட்டி அளித்துள்ளார். " எனக்கு ரோபோ ஷங்கரின்காமெடி மிகவும் பிடிக்கும்.
அவருடைய தனித்துவமான உடல் மொழி எனக்கு பிடித்துள்ளது,மொட்டை ராஜேந்திரன் நல்ல செய்கிறார் ஆனால் அவரை என்னுடன் ஒப்பிட்டு பார்ப்பது சரியானதாக இருக்காது.
நானும் வடிவேலும், கவுண்டமணி - செந்தில் இருக்கும் காலத்தில் ஒன்றாக தான் வளர்ந்தோம். நாங்கள் வளரும் காலத்தில் கவுண்டமணி அண்ணனுக்கு என் காமெடி பிடிக்காமல் இருக்கும்.
ஆனால் இன்றைய நிலைமை அப்படி இல்லை , திறமை இருந்தால் பாராட்டுக்கள் தேடி வரும் என்று கூறியுள்ளார்.

அச்சம் எனபது மடமையடா தரும் ஜுன் 17-ல் காத்திருக்கும் ஸ்பெஷல் விருந்து

சிம்பு-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் வெளிவந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் பாடல்கள் பெரிதளவில் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திலும் இணைந்துள்ளது. இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அமைந்துள்ள ‘தள்ளிப் போகாதே’, ‘ராசாலி’ ஆகிய பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. யுடியூப் இணையதளத்தில் இப்பாடல்கள் 15 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, மற்ற பாடல்களை வருகிற ஜுன் 17-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.
 அதற்கு முந்தைய தினம் படத்தை பற்றி கவுதம் மேனன், ஏ.ஆர்.ரகுமான், சிலம்பரசன், மஞ்சிமா மோகன் மற்றும் படக்குழுவினரின் பேட்டிகளை கௌதம்மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் யுடியூப் சேனலில் வெளியிடவிருக்கிறார்களாம். அதோடு, படத்தின் சில காட்சிகளையும் வெளியிடப்போவதாக கூறப்பட்டுள்ளது.

எனவே, வருகிற ஜுலை 17-ந் தேதி சிம்பு-ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களுக்கு ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் பாடல்கள் உண்மையிலேயே ஸ்பெஷல் விருந்தாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.

சியான் விக்ரத்தின் படத்தின் டிரைலர் வெளியாகும் நாள்

அரிமா நம்பி பட இயக்குனர் அடுத்து இயக்கிவரும் திரைப்படம் இருமுகன்விக்ரம், நயன்தாரா நடிக்கும் இப்படம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில்,
 படத்தின் ஒவ்வொரு புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன.
ஜூலை முதல் வாரத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தை சுதந்திர தின விடுமுறை வாரமான ஆகஸ்ட் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்திருப்பதாக தகவல் வந்துள்ளது.

தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு தேதி அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் ‘தொடரி’ மற்றும் ‘கொடி’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தை முடித்தவுடன் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் ‘வட சென்னை’ படம் அடுத்த வருடம் தொடங்கும் என செய்தி வெளியானது. ஆனால் தற்போது இதில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பை வரும் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தை முடித்த பிறகுதான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.
‘வடசென்னை’ படத்தில் தனுஷூக்கு ஜோடியாக சமந்தா மற்றும் ஆண்ட்ரியா நடிக்கவுள்ளார்கள். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்

கபாலி ரிலீஸ் தேதி மீண்டும் மாறுகிறதா?

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கபாலி’. ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் முதலில் ஜூலை 1ஆம் தேதி வெளிவரும் என்று கூறப்பட்டது.
ஆனால் டப்பிங் பணிகளின் தாமதம் காரணமாக ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டது. தற்போது மேலும் ஒரு வாரம் ‘கபாலி’ தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
‘கபாலி’ படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 22 என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த படத்தின் வெளிநாட்டு உரிமைகளை பெற்ற விநியோகிஸ்தர்களும் இதை மறுக்கவில்லை. எனவே ஒருசில காரணங்களால் ‘கபாலி’ ஒரு வாரம் தள்ளிப்போகவுள்ளதாகவும், ஆனால் அதே நேரத்தில் ஜூலை 22ஆம் தேதி அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஜூலை 1ஆம் தேதியே கபாலி ரஜினியை திரையில் காணலாம் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஜூலை 15-ல் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போவதால் ரசிகர்கள் இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார்.

மோகன்லால் கையில் கபாலி

ரஜினி நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் ‘கபாலி’. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது 22ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப்போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ‘கபாலி’-யில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இணைந்திருக்கிறார். படத்தில் அல்ல, ‘கபாலி’ படத்தின் வியாபாரத்தில் இணைந்திருக்கிறார். அதாவது ‘கபாலி’ படத்தை கேரளாவில் மோகன்லால் வெளியிட இருக்கிறார். மோகன்லாலின் மேக்ஸ் லேப் நிறுவனம், ரூ.8.5 கோடிக்கு படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது.
இந்த தகவலை மோகன்லாலின் மேலாளர் ஆண்டனி, தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரிய தொகைக்கு கேரளாவில் இதுவரை வேறு எந்தவொரு நேரடி தமிழ் படமும் வியாபாரம் ஆனதில்லை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘தெறி’ படத்தின் கேரள விநியோக உரிமை 5.6 கோடி ரூபாய்க்கு விலை போனதாக அப்போது செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

PTC தளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

நம்மில் பலரது கேள்வி என்னவென்றால்

1.இணையம் மூலமாக வருமானம் ஈட்ட முடியுமா?
2.இணையத்தில் எப்படி சம்பாதிப்பது?
3.இணையவழி சம்பாத்தியம் உண்மையா?
4.இன்டர்நெட்டில்  வருமானம் பெற முடியுமா?
5.ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியுமா?
6.ஆன்லைன் மூலமாக பணம்  பண்ணுவது எப்படி?


     இப்படி பலவிதமாக கேள்விகள் கேட்டாலும் இதற்கு ஒரே கேள்வியாய் இன்டெர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பது மட்டுமே!

இணையத்தில் பலவழிகளில் சுலபமாக பணம் சம்பாதிக்க வேண்டுமா?

   நண்பர்களே நாம் இணையத்தில் சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு முதலில்பொறுமை,தன்னம்பிக்கை,விடாமுயற்சி இந்த மூன்றும் இருக்க வேண்டும்.மேலும் இணையம் என்பது மங்காத்தா  விளையாட்டு போன்றது நம்மை ஏமாற்றுபவர்களை நாமும் ஏமாற்றி சம்பாதிக்க வேண்டி வரும்.எனவேதான் எனது வலைதள தலைப்பு கூட மணி மணி மணி மங்காத்தா என்று வைத்துள்ளேன். மொக்க போடாத மேட்டருக்கு வான்னு நினைப்பீங்க.என்ன செய்வது நம்மில் பலருக்கு எடுத்த எடுப்பிலேயே பணம்சம்பாதிக்கணும்னு நினைக்கிறார்களே தவிர பணம் சம்பாதிக்க தேவையானபொறுமை,தன்னம்பிக்கை,விடாமுயற்சி இந்த மூன்றையும் கடைபிடிப்பதில்லை அப்படி கடைபிடித்தால் நீங்கள் சம்பாதிப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.சரி மேட்டருக்கு வருவோம்.

இணையத்தில் பணம் சம்பாதிக்க பல தளங்கள் பல வழிகளில் உதவுகின்றன.அதில் Neobux பற்றி பார்ப்போம்.
நியோபக்ஸ்(NEOBUX PTC) என்றால் என்ன?
நியோபக்ஸ் என்பது (PTC)விளம்பரம் மூலம் சுலபமாக  பணம் சம்பாதிக்கும் தளமாகும்.

நியோபக்சில் எப்படி சம்பாதிப்பது? என்பது பற்றியும் மற்றும் Neobux-ல்இணைவதற்க்கான தகுதிகள் பற்றியும் விரிவாக காண்போம் :

        இந்த தளத்தில் இணைவதும், பணம் சம்பாதிப்பதும் முற்றிலும் இலவசமே. ஆனால் பின்வரும் தகுதிகள் நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இணையத்தில் பணம் மீட்ட முடியும். எனவே பின்வரும் தகுதிகளை நீங்கள் கொண்டிருந்தால் மட்டுமே இத்தளத்தில் இணையுங்கள்.

•    தினந்தோறும் 10 நிமிடம் நீங்கள் இதற்கு செலவிட வேண்டும். அப்பொழுதான் உங்கள் நண்பர்களின் வருவாயைப் பெறமுடியும்.

•    உங்களிடம் இணைய இணைப்புடன் கூடியா சொந்த கணினி இருத்தல் வேண்டும். ஏனெனில் ஒரு கணினியில் ஒரு அக்கவுண்ட் மட்டுமே திறக்க வேண்டும்.

•    பொறுமை, தன்னம்பிக்கை: ஆரம்பத்தில் சிறிதளவு பணம் மட்டுமே சம்பாதிக்க முடிவதால் இடையில் மனம் தளராமல் தொடந்து லிங்கை பார்வையிடுவதுடன் சேர்ந்து ஒரு மாதம் கழிந்த பின் அப்கிறேடுகளை மேற்கொண்டு சம்பாதிக்கலாம்.

•    PAYPAL அல்லது   PAYZA அக்கவுண்ட் கண்டிப்பாக தேவை. நீங்கள் சம்பாதித்த பணம் இங்கு தான் அனுப்பிவைக்கபடும். இதிலுருந்து பணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
 Neobux -ல் சேருவது எப்படி ?


Neobux -ல் சேருவது எப்படி என்று இப்போது பார்க்லாம்.

தேவையானவை:

1.    ஈ மெயில் முகவரி
2.    PAYPAL அல்லது   PAYZA அக்கவுண்ட்

1. ஓர் இ-மெயில் முகவரியை உருவாக்கிக் கொள்க:
          எல்லோரிடமும் இருக்கும். இல்லையெனில் இங்கு உருவாக்கிக்கொள்ளவும்.
Yahoo! Mail
Gmail

2. ஓர் AlertPay அல்லது PayPal அக்கவுண்டை உருவாக்கிக் கொள்க:

   PayPal, Alertpay ஆகியவை ஓர் இன்டெர்நெட்(இணையத்தில் மட்டும்) வங்கியாகும். நீங்கள் நியோபக்ஸ்.காம்-ல் சம்பாதித்த பணம் இங்கு அனுப்பி வைக்கப்படும். நீங்கள் உங்களுடைய வங்கி அக்கவுண்ட் எண்ணை இணைத்து, பணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம் (சிறு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.) அல்லது e-bay போன்றஇணையதளங்களில் ஷாப்பிங் (Shopping) செய்து கொள்ளலாம்.

          Alertpay -கிளிக் செய்யவும். PayPal -கிளிக் செய்யவும். AlertPay-ல் சேருவதே நல்லது. ஏனெனில்PayPal-ல் பான் கார்டு(PAN Card) போன்ற விவரங்களைக் கேட்கிறார்கள். உங்களிடம் பான் கார்டு(PAN Card)இருந்தால் PayPal-ல் சேருங்கள். இல்லையெனில் AlertPay-ல் சேருங்கள். (இரண்டிலும் தற்சமயம் உங்களது கிரடிட் கார்டு விவரங்களை சேர்க்க வேண்டாம்)

3. நியோபக்ஸ்.காம் செல்க: 

           கீழே உள்ள படத்தை கிளிக் செய்து Neobux தளத்திற்கு செல்லவும்
 4. வரும் திரையில் Register என்பதனை கிளிக் செய்யுங்கள்.


5.ரெஜிஸ்ட்ரேசன் ஃபார்மை நிரப்பி அக்கவுண்டை ஆக்டிவேட் செய்க:5.உங்கள் ஈ மெயிலுக்கு லாகின் செய்து Neobux  இல் இருந்து வந்திருக்கும் லிங்கை கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யுங்கள்.

6. மீண்டும் Neobux  தளத்தில் லாகின் என்பதை கிளிக் செய்து உங்கள்  Username, Password என்பவற்றை இட்டு Neobux  தளத்தினுள் லாகின் செய்யுங்கள்.7. விளம்பரத்தை க்ளிக் செய்க :
லாக் ஆன் ஆன பிறகு மேல் மூலையை பாருங்கள் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்
.

உங்கள் யூசர் நேமுக்கு அருகில் நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்திர்கள் என இருக்கும். இப்பொழுது பணம் சம்பாதிக்க View Advertisement- ஐ க்ளிக் செய்யவும். கீழே உள்ள படத்தைப்போல் நீங்கள் காண்பீர்கள்.


இப்பொழுது நீங்கள் க்ளிக் செய்ய விளம்பரங்கள் தயாராக உள்ளன. முதல் விளம்பரத்தை க்ளிக் செய்தால் ஒரு சிவப்பு புள்ளி ஒன்றைக் காண்பீர்கள். கீழே உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்


அந்த சிவப்பு புள்ளியை க்ளிக் செய்யவும் இப்பொழுது விளம்பரமானது ஒரு புதிய விண்டோவில் திறக்கப்படும்

இப்பொழுது இடது மேல் மூலையில் இது மாதிரி காண்பீர்கள்பிறகு இப்படி,


மேலே உள்ளது போல் வந்தவுடன் அதில் Close-ஐ க்ளிக் செய்யவும். இதே போல் அனைத்து விளம்பரத்தையும் க்ளிக் செய்யவும். அனைத்து விளம்பரங்களையும் க்ளிக் செய்த பிறகு உங்கள் அக்கவுண்டில் ஒரு குறிப்பிட்ட தொகை வந்திருக்கும்.

                இப்படி ஒவ்வொன்ன கிளிக் செய்து எப்படா சம்பாதிப்பது என்று ஒரு விரக்தி எல்லோருக்கும் வரும் நண்பா,ஏன் எனக்கும் கூட வந்தது.அப்படி வந்தபோது நான் விடாமுயற்சியுடன் கிளிக் செய்யதும்,RENTED REFERAL சேர்த்தியும் தான் இப்போது ஒரு குறிப்பிட்ட வருமானம் எனக்கு வந்துகொண்டிருக்கிறது.எனவே நண்பா நாம் ஒரு பீனிக்ஸ் பறவை மாதிரி, சோர்ந்தாலும் நமது வேலையை சரியாக செய்தால் வெற்றி நமக்கே.விடாமுயற்சி விஸ்வருபவெற்றி.

தினமும் விளப்பரத்தை க்ளிக் செய்ய மறந்து விடாதீர்கள்.

Neobux இல் நிறைய சம்பாதிக்கும் வழிகள்:

1. Direct Referrals
2. Rented Referrals
3. Adprize
4. Upgrade Golden Membership
5. Mini Jobs
6.Neopoints

1. Direct Referrals என்றால் என்ன ?

Direct Referrals என்பது உங்களுடைய Referral Link மூலம் சேர்ந்த உங்களுடைய நண்பர்கள் ஆவர்கள். இவர்கள் க்ளிக் செய்யும் ஒவ்வோரு விளம்பரத்திற்கும் உங்களுக்கு 0.005$ கிடைக்கும். உங்களுடைய Referral Link-கை நிங்கள் ரெஜிஸ்டர் செய்து லாகின் ஆன பிறகு வரும் முதல் பக்கத்தில் Banners என்பதை க்ளிக் செய்யவும்.

இந்த பக்கத்தில் REFERAL LINK-கை எடுத்துக் கொள்ளலாம். நினைவிருக்கட்டும் நிங்கள் உங்கள் நண்பர்களை Refer பண்ணுவதற்கு நீங்கள் Neobux.com ல் ரெஜிஸ்டர் செய்து குறைந்தபட்சம் 30 நாட்கள் ஆகியிருக்க வேண்டும் மற்றும் 100 விளம்ப்ரங்களை க்ளிக் செய்திருக்க வேண்டும்.

2.Rented Referrals என்றால் என்ன ?

உங்களால் நண்பர்களை சேர்க்க இயலவில்லை என்றால் நீங்கள்  Referral ல்களை வாடகைக்கு எடுக்கலாம். Referral ல்களை  3,5,10,15,20,25,30,40,50,60,70,80,90,100 என்ற எண்ணிக்கையில் எடுத்து கொள்ளாலாம்.

உதாரணமாக நீங்கள் மூன்று நபர்களை வாடகைக்கு எடுத்தால் மாதம் வாடகை $ 0.600 ஆகும். 5 - 1$, 10-2$, 15-3$, ஆகும். இதில் வரும் வருமானத்தை வைத்துதே இவர்களை எடுத்துகொள்ளலாம்

3.Adprize என்றால் என்ன ?


நீங்கள் ஒரு விளம்பரத்தை க்ளிக் செய்து பார்த்த உடன்  Adprize ல் மூன்று விளம்பரங்கள் Add ஆகும். அந்த மூன்று விளம்பரங்களை க்ளிக் செய்யும் போது முதலில் க்ளிக் செய்த விளம்பரம் அதில் வந்தால் உங்களுக்கு பரிசு கிடைக்கும்.


அவை என்னென்ன பரிசுகள் என்பதை பார்ப்போம்

0.25$, 0.50$, 1$, 10$, Upgrade Golden Membership ஆகும்.

4.Upgrade Golden Membership:

நீங்கள் உங்கள் அக்கவுண்டை ஒரு வருடத்திற்கு $ 90 செலுத்தி  Upgrade செய்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் வருமானம் இரட்டிப்பாகும். முதலில் நீங்கள் சம்பாதித்த தொகை 90$ வந்தவுடன் முதல் வேலையாக UPGRADE செய்து கொள்ளுங்கள். அப்பெழுதான் மாதம் 10,000$ டாலர் சம்பாதிக்க முடியும்.
 
5. Mini Jobs:

பல Data Entry வேலைகள் இதில் இருக்கும் அதில் உங்களுக்கு தெரிந்த வேலையை செய்து சம்பாதிக்கலாம். இதில் திறைமை உள்ளவர்கள் தினம் 20 $ வரை சம்பாதிக்கலாம். இணையதில் வீட்டிருந்தே வேலை செய்து சம்பாதிக்க நினைக்கும் நண்பர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். முக்கியமாக வீட்டில் இருக்கும் படித்த பெண்களுக்கு இந்த Mini Jobs மூலம் நிறைய சம்பாதிக்கலாம்.

6.Neopoints:

நீங்கள் வாடகைக்கு REFERALS(RENTED REFERALS) எடுப்பதாக இருந்தாலோ அல்லது உங்கள் வாடகை REFERALலை மாற்றுவதாக இருந்தாலோ அதற்கு நீங்கள் சம்பாதித்ததிலிருந்து கொடுப்பதற்கு பதிலாக உங்களது NEOPOINTSலிருந்து கொடுக்கலாம்.

        
        
Clixsense என்றால் என்ன?

       மேலும் Neobux ptc போலவே மிகச்சிறந்த மற்றொரு  வலைத்தளம் தான் clixsense இதுவும் நிரந்தரமான  வருமானம் தரக்கூடிய தளம் தான்.ஏற்கனவே Neobux ptc பற்றி குறிப்பிட்டுளேன். அதே அம்சங்களை கொண்டுள்ள தளம்தான் இதுவும்.இந்த தளத்தில் சென்று Register செய்து கொண்டு சம்பாதிக்கவும்.இந்த clixsense தளத்திலும் clixgrid, tasks என்கிற சிறு,சிறு வேலைகள் போன்றவை உள்ளன.

கீழே உள்ள clixsense லிங்கை கிளிக் செய்து உடனே REGISTER செய்யுங்கள்.இதனால் எனக்கும் ஒரு சிறு வருமானம் கிடைக்கும் ஒருத்தருக்கொருத்தர்  உதவிக்கொள்ளலாம். என்ன நண்பாஇன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பது கொஞ்சம் புரிந்ததா? அப்புறமென்ன களத்தில் இறங்கவேண்டியதுதானே!

clixsense-இல் சேர கீழே கிளிக் செய்யவும்


எச்சரிக்கை:
 
1.    ஒரே கணிப்பொறியில் இரண்டு கணக்கை உருவாக்குதல்.
2.    ஒரே கணிப்பொறியில் இரண்டு கணக்கை பயன்படுத்துதல். எனவே உங்கள்நண்பர்களின் கணக்கை உங்களது கணினியில் உருவாக்க வேண்டாம்.
3.    கண்டிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்டுகளை வைத்துக்கொள்ளக் கூடாது. உங்களது IP Addressமற்றும் MAC Address ஆகியவற்றை வைத்து கண்டுபிடித்து உங்கள் அக்கவுண்டை DELETE பண்ணி விடுவார்கள். உங்களிடம் இரண்டு கணிப்பொறி மற்றும் இரண்டு இன்டர்நெட் கனக்சன் இருந்தால் தாராளமாக வைத்துக்கொள்ளலாம்.
4.    நியோபக்சிர்க்கு ப்ளக்கின்(plugin)  பயன்படுத்த வேண்டாம் ஏனென்றால் இது ஒரு சிறந்த(Elite Site) தளம்.
5.    நண்பா இணையம் மூலமாக  ஒரு மணி நேரத்தில் இவ்வளவு சம்பாதிக்கலாம் அவ்வளவுசம்பாதிக்க முடியும் என்றும் இதற்கு 5 டாலர்,10 டாலர் ஆகும் எனவும் விளம்பரபடுத்துவார்கள் தயவுசெய்து அதை நம்ப வேண்டாம்.இணையத்தில் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது நாம் புரிந்து கொள்வதில் தான் உள்ள

Thursday, May 19, 2016

கபாலியை தொடர்ந்து சூர்யா-கார்த்தியுடன் ரஞ்சித்…!

அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கினாலும் ரஞ்சித் இயக்கினாலும், இன்று ரஜினியின் கபாலி டீசரால் உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளார்
எனவே கபாலியை அடுத்து, ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பது யார்? என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது.
இதனையடுத்து சூர்யா நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஹரியின் சிங்கம் 3, மற்றும் சதுரங்க வேட்டை வினோத் ஆகிய இயக்குனர்களின் படங்களை முடித்துவிட்டு ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என கூறப்படுகிறது.
இதனையடுத்து மீண்டும் மெட்ராஸ் படத்தின் கூட்டணி இணையவுள்ளதாம். அதாவது மீண்டும் கார்த்தியை ரஞ்சித் இயக்குவார் என கூறப்படுகிறது.
காஷ்மோரா, மணிரத்னம் படங்களை அடுத்து கார்த்தி இதில் நடிப்பார் எனத் தெரிகிறது.

தேர்தலில் சரத்குமார் தோல்வி… ராதிகா என்ன சொன்னார்..?

தமிழக சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான சரத்குமார் போட்டியிட்டார்.
அவர் ஜெயலலிதா தலைமையிலான ஆளுங்கட்சி சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளார்.
இதுகுறித்து இவருடைய மனைவியும் பிரபல நடிகையுமான ராதிகா தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது…
‘நீங்கள் மீண்டும் எழுந்து நின்றால் அது தோல்வியல்ல. உங்களின் விடாமுயற்சி பெருமையாக உள்ளது. திருச்செந்தூர் மக்களின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்

இனி கெட்டப்பை மாற்றியே ஆகனும்… சூப்பர் ப்ளானில் விஜய்..!

நம் தலைமுடியின் ஸ்டைலை மாற்றினால், நம் முகமே மாறிவிட்டதாக தோன்றும். அப்படி ஒரு சிறப்பம்சம் நம் சிகை அலங்காரத்திற்கு உண்டு.
எனவே பெரும்பாலும் நடிகர்கள் இந்த டெக்னிக்கை மாற்றிக் கொண்டு வெவ்வேறு கெட்டப்புகளில் தோன்றுகின்றனர்.
ஆனால் விஜய்யை பொறுத்தவரை எப்போதும் ஒரே மாதிரியான சிகை அலங்காரத்துடன் நடிக்கிறார் என்பதே அது.
ப்ரண்ட்ஸ் மற்றும் தெறி படங்களின் க்ளைமாக்ஸ் காட்சிகளில் கூட முடியை ஒட்டவெட்டி சம்மர் கட்டிங் மட்டுமே செய்திருந்தார்.
இதற்கு விஜய்யின் தலைமுடி வளைந்து கொடுக்காத தன்மைதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
எனவே பரதன் இயக்கத்தில் உருவாகவுள்ள இரண்டு விதமான கெட்டப்பில் ஒரு புதிய கெட்டப்பை முயற்சிக்க இருக்கிறாராம்.
இதற்காக வளைந்து கொடுக்கும் நெகிழ்வான தலைமுடியாக தன் முடியின் தன்மையை மாற்ற இருக்கிறாராம்.
எனவே, இந்த ஹேர் ட்ரீட்மெண்ட்டுக்காக விரைவில் வெளிநாடு செல்லக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது