Advertisement

Thursday, June 19, 2014

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாணா’ பெயர் மாற்றம் ?

சிவகார்த்திகேயன் தற்போது தனுஷ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘டாணா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தக் காலத்தில் போலீசாரை ‘டாணாகாரன்’ என்று சொல்லித்தான் அழைப்பார்கள்.
படத்தில் சிவகார்த்திகேயன் போலீசாக நடிப்பதால் ‘டாணா’ என பெயர் வைத்தார்கள். ஆனால், தற்போது படத்தின் பெயரை மாற்றிவிடலாம் என முடிவெடுத்திருக்கிறார்களாம்.
‘டாணா’ என்பது கொஞ்சம் கிண்டல், கேலி கலந்த வார்த்தையாகத்தான் அந்தக் காலத்தில் அழைக்கப்பட்டது. எனவே, படம் வெளிவரும் நேரத்தில் யாராவது இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்ன செய்வது என்று யோசிக்கிறார்களாம்.
அதோடு, வழக்கு ஏதாவது தொடர்ந்து விட்டால் அதன் பின் தேவையில்லாத
அலைச்சல் ஏற்படும் என்றும் நினைக்கிறார்களாம். அதைவிட இப்போதே, படத்தின் தலைப்பை மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.
அதனால், போலீசுக்கு சம்பந்தப்பட்ட பெயர் ஏதாவது வைக்கலாம் என்று முடிவெடுத்து ‘காக்கிச் சட்டை’ என்ற பெயரைத் தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால், கமல்ஹாசன் நடித்து 80களில் ஒரு படம் வந்திருக்கிறது.
அதனால், அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி வாங்க வேண்டும். எனவே, அந்த படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பனை அணுகி படத்தின் தலைப்புக்கு சம்மதம் வாங்க முடிவெடுத்திருக்கிறார்களாம்.
ஒரு ஆக்ஷன் பட டைட்டிலை ‘காமெடி’ படத்திற்கு அவர் வழங்குவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...