
எனவே தமிழகத்தின் முதல் அமைச்சராக மீண்டும் அரியணையில் ஏறுகிறார் ஜெயலலிதா.
எனவே நடிகர் சங்கத்தின் சார்பில் விஷால் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் தென்னிந்திய சினிமாவின் தொழிலாளர் அமைப்பான ஃபெப்சியும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதன் நிர்வாகிகள் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து ஃபெப்சி விடுத்துள்ள அறிக்கையில்… “முதலமைச்சர் அம்மா அவர்களின் வெற்றியை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தொழிலாளர்களாகிய நாங்கள் மனசாரக் கொண்டாடுகிறோம்.
இந்த வரலாற்று சாதனைப் படைத்த அம்மாவை வாழ்த்தி செயற்குழுவில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...