Advertisement

Monday, June 16, 2014

அரசியலில் குதிக்கும் கோவை சரளா!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகள் குறைவு தான் என்றாலும், அந்த குறைவிலேயே முக்கியமானவர் கோவை சரளா. பல வெற்றிப் படங்களில், பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்துள்ள கோவை சரளா, தற்போது அரசியல்வாதியாகியுள்ளார். ஆனால், இது நிஜத்தில் அல்ல ஒரு படத்தில்.

வி.ஆர்.டி.டி.ஆர்ட்ஸ் பிலிம்ஸ் மற்றும் விஸ்டம் பிலிம்ஸ் பிரைவேட்
லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் 'பகடை பகடை'. இப்படத்தில் நாயகனாக திலீப்குமார் அறிமுகமாகிறார். நாயகியாக திவ்யா சிங் நடிக்கிறார். இந்த படத்தில் தான் கோவை சரளா முக்கியமான கதாபாத்திரத்தில், அதுவும் அரசியல்வாதியாக நடித்துள்ளார். இவர்களுடன் சிங்கமுத்து, மயில்சாமி, இளவரசு, ரிச்சு, முத்துக்காளை, சங்கர், சந்தானபாரதி, ஆகியோர் நடித்துள்ளனர்.

சூர்யா-ஜோதிகா நடித்த பேரழகன் படத்தை இயக்கிய சசிசங்கர் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். ராம்ஜி - ஏ.சி.ஜான்பீட்டர் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை தமிழமுதன், பால்முகில் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கோவை சரளா, சிங்கமுத்து, நாயகன் திலீப்குமார், நாயகி திவ்யா சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கோவை சரளா, "நான் பொதுவாக எந்த திரைப்பட விழாவிலும் கலந்துகொள்வதில்லை. இதில் திலீப்குமாருக்காக தான் வந்தேன். அந்த அளவுக்கு படப்பிடிப்பு தளத்தில் மரியாதைக் கொடுத்து நடந்துக்கொள்வார். இப்படத்தில் எனக்கு முக்கியமான அதே சமயம் நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். ஒரு அரசியல்வாதியாக நடித்துள்ளேன். குறைந்த நாட்கள் கால்ஷீட் கொடுத்தாலும், படம் முழுவதும் நான் இருக்கிறேன். அந்த அளவுக்கு வேகமாக படப்பிடிப்பு நடந்தது.

இதுவரை நான் எந்த படங்களுக்கும் மூன்று நாட்கள் டப்பிங் பேசியதில்லை. ஒரு நாளிலேயே டப்பிங் முடித்து விடுவேன். காஞ்சனா படத்திற்கு கூட ஒரு நாள் தான் டப்பிங் பேசினேன். ஆனால், இந்த படத்தில் மூன்று நாட்கள் டப்பிங் பேசியிருக்கிறேன். அந்த அளவுக்கு ரொம்பவே நல்ல கதாபாத்திரம் அது." என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...