Advertisement

Sunday, June 15, 2014

பொருத்தம் பார்க்க வருகிறார் சங்கவி!

அஜீத் அறிமுகமான அமராவதி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த கன்னடத்து பைங்கிளி சங்கவி. விஜய் ஹீரோவாக நடித்த ரசிகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவரும் சங்கவிதான்.
அதன் பிறகு நான்கு படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட சங்கவி. கடைசியாக சாவித்ரி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.
சங்கவிக்கு பலமுறை திருமண
ஏற்பாடுகள் நடந்தும் கடைசி நேரத்தில் அது முறிந்திருக்கிறது. அவருக்கு சரியான பொருத்தம் அமையவில்லை.
ஆனால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆஹா என்ன பொருத்தம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்துவிட்டார். இது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
பல வருடங்களுக்கு முன்பு புகழ்பெற்ற ஜோடிப் பொருத்தம் என்ற நிகழ்ச்சியின் மறுபதிப்புதான் இந்த நிகழ்ச்சி. இதில் கலந்து கொள்ளும் கணவன் மனைவிக்கு இடையே உள்ள ஒற்றுமை, புரிதல், விட்டுக்கொடுத்தலை பரிசோதித்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி. தற்போது இதன் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...