Advertisement

Monday, June 16, 2014

சினிமாவில் சங்கங்களே இருக்க கூடாது - பாரதிராஜா காட்டம்

 தயாரிப்பாளர் கே.ராஜனின், தமிழ்த் திரைப்பட பாதுகாப்புக் கழகம் மற்றும் பத்திரிகையாளர் குரல் வார இதழ் இணைந்து, தேசிய விருது பெற்ற தமிழ் திரையுலக கலைஞர்களுக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடத்தியது.

சென்னையில் நடைபெற்ற இவ்விழாவில் இயக்குனர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு தேசிய விருது பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு விருது வழங்கி கெளரவித்தார். மேலும், மறைந்த
இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவின் உருவப்படம் திறக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் தயாரிப்பாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.எஸ்.சீனிவாசன், விஜய முரளி, ஜாக்குவார் தங்கம், இசையமைப்பாளர் எஸ்.எ.ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ராஜன், "தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிப் சினிமாவும் ஆரம்பத்தில் சென்னையில் இருந்ததால், இங்கே தென்னிந்தியா வர்த்தக சபை தொடங்கப்பட்டது. பிறகு அந்த அந்த மாநில சினிமாக்கள் அந்த அந்த மாநிலங்களில் வளர்ச்சிப் பெற்ற பிறகு, அங்கேயே ஒரு வர்த்தக சபை தொடங்கப்பட்டு விட்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் தமிழ் திரைப்படங்களுக்காக தனியாக வர்த்தக சபை இல்லை.

இப்போது உள்ள தென்னிந்தியா வர்த்தக சபையில், மற்ற மொழி தயாரிப்பாளர்களின் கை தான் ஓங்கியிருக்கிறது. அவர்களுக்கு கிழே தான் தமிழன் இருக்கிறான். இது மாற வேண்டும்." என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பாரதிராஜா, "தமிழ்த் திரைப்படங்களுக்கு தனியாக வர்த்தக சபை தொடங்க இங்கே, பலர் முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் அது தோல்வியில் தான் முடிந்தது. காரணம் பிராக்சி என்ற ஒரு முறையை வைத்துக்கொண்டு, இங்கே இல்லாதவர்களும் ஊட்டு போடுவதால் தான் தென்னிந்தியா வர்த்தக சபையில் தமிழர்கள் அடக்கி ஆளப்படுகிறார்கள்.

இதோ இங்கே அஞ்சலி செலுத்தப்பட்ட பாலுமகேந்திரா, அவருடைய படத்தில் ஒரு புகைப்படம் எடுத்துவிட்டார் என்று, பிரச்சனையை எழுந்தது. ஒரு கலைஞன் தான் நினைத்த கதையை படமாக எடுப்பது போல தானே, தான் விரும்பிய புகைப்படத்தையும் எடுக்க நினைத்தான், அவன் கலைஞன் அவனை யாராலையும் தடுக்க முடியாது. ஆனால், இந்த சங்கங்கள் அதை செய்ய விடுவதில்லை. அப்போதே நாங்கள் முடிவு செய்தோம் இந்த சங்கங்களே வேண்டாம் என்று.

இப்போது காலம் மாறிவிட்டது. டிஜிட்டல் வந்துவிட்டது. நன்கு லைட்டுகளை வைத்து சிறிய இடத்தில் படம் எடுக்கிறார்கள். அதை உங்களால தடுக்க முடியுமா. இப்போது அவர் அவர் வீட்டுக்குளேயே படம் எடுக்கிறார்கள், எங்கே நீங்கள் தடுத்து பாருங்களேன். இதை தான் நானும், பாலுவும் அப்போதே எதிர்த்தோம். அவர் ஒரு நல்ல கலைஞன் அவனுக்காகவும், தேசிய விருது வாங்கியவர்களை கெளரவிப்பாதற்காகவும் நடைபெறும் விழா என்பதால் தான் இதில் நான் கலந்துகொண்டேன். தேசிய விருது வாங்கிய ராமுக்கு இயக்குனர் சங்கத்தில் பாராட்டு விழா நடத்தவில்லை. கேட்டால், அவர் மூன்று ஆண்டுகளாக சந்தா கட்டவில்லையாம், அதனால் அவருக்கு பாராட்டு விழா நடத்த மாட்டார்களாம். அப்படியானால் அவன் இயக்குனர் இல்லையா. அவனைப் பொன்ற கலைஞனுக்கு நானோ, இல்லை இங்கு இந்த விழாவை நடத்ஹ்டிக் கொட்டிருக்கும் ராஜன் போன்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...