Advertisement

Monday, June 16, 2014

மதுரையைப் பற்றி சொல்லும் 'மதுரக்காரங்கே'

சபரி மலை சாஸ்தா கிரியேஷன்ஸ் எனும்  புதிய நிறுவனம் தயாரிக்கும் 'மதுரக்காரங்கே' என்கிற புதிய திரைப்படத்தை தயாரித்துள்ளது.

பாசத்தின் காரணமாக ஐந்து நண்பர்கள் ஏரியா தாதாவிடம் சேர்த்து ஆயுதம் என்றால் என்னவென்று தெரியாமல் ஆயுதத்தை தூக்கி கொலை, கொள்ளை போன்ற வேளைகளில் ஈடுபடுகிறார்கள் .ஒருகட்டத்தில் தவறான பாதையில் இருந்து விலகி திருந்த நினைக்கிறார்கள் .ஆத்திரமடைந்த
வில்லன் தாதா இரண்டு பேரை போட்டு தள்ளுகிறான் .மீதி மூண்று  பேர் கொல்லபடுகிரார்களா? அல்லது வில்லன் கொள்ளபடுகிறானா? என்பதை  ஆயுதத்தை எடுத்தவன் ஆயுதத்தால் அழிவு என்பதை உணர்த்தும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் சதீஷ் ,ரவி ,பாண்டி ,சங்கர் ,மணி ஆகியோர் புதுமுக அறிமுக கதாபாத்திரத்தில் மற்றும் கதாநாயகிகளாக  தாரணி , ஷைலு மற்றும் வில்லனாக முருகன் அறிமுகமாகின்றனர் .

கதை, திரைக்கதை, வசனம் எழுது வீரமணி பிரபு இயக்குகிறார். மகேஸ்வரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு எஸ்.பி.எ.ரியாஸ் காதிரி இசையமைக்கிறார். ஆளி, எஸ்.பி.எ.ரியாஸ் காதிரி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். பாடல்களைப் கிருஷ்ணராஜ்,வேல்முருகன் ,சின்ன பொண்ணு,சாய் சரண் ,சத்திய பிரகாஷ் ,பத்மா  ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

மதுரை, திருநெல்வேலி ,தூத்துக்குடி ,சிவகங்கை தேனி, கம்பம், ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு  நடைப்பெற்றது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...