Advertisement

Thursday, June 19, 2014

முத்தக்காட்சிக்கு தனி சம்பளம் வாங்கும் அலியா பட்!

பாலிவுட்டின் டாப் ஹீரோயின்களெல்லாம் நடுத்தர வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் 21 வயதாகும் ஆலியா பட் வேகமாக வளர்ந்து வருகிறார். இன்றைக்கு இருக்கும் டாப் ஹீரோயின்கள் பத்து படங்களுக்கு பிறகுதான் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்தார்கள்.
ஆனால் ஆலியா முதல் படத்திலிருந்தே லிப் லாக்
முத்தக் காட்சியில் தைரியமாக நடித்து வருகிறார். ஆலியா இதுவரை நடித்த ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர், ஹெவே, 2 ஸ்டேட்ஸ் மூன்று படங்களிலும் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்துள்ளார்.
இந்த காட்சிக்காவே படம் வசூலை குவிப்பதாக தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள். இதனால் ஆலியா நடிக்கும் படத்தில் எப்படியாது முத்தக் காட்சியை வைக்கச் சொல்கிறார்கள். தற்போது ஆலியா நடித்து வரும் ஹம்டி கி டுல்ஹானியா படத்திலும் முத்தக்காட்சி இருக்கிறதாம்.
ஒரு படத்திற்கு 3 கோடி சம்பளம் வாங்கும் ஆலியா, முத்தக் காட்சியும், நெருக்கமான காட்சிகளும் இருந்தால் ஒரு கோடி கூடுதலாக கேட்கிறாராம். அந்தக் காட்சியை வைத்து பலகோடி நீங்கள் சம்பாதிக்கும்போது எனக்கு ஒரு கோடி கொடுத்தால் என்ன என்று கேட்கிறாராம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...