Advertisement

Monday, June 16, 2014

எதற்காக நடிக்க ஆரம்பித்தேன் - இயக்குனர் ஜெயம் ராஜா விளக்கம்

'ஜெயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக அறிமுகமாகி, தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இயக்கி வரும் ஜெயம் ராஜா, தற்பொது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

'என்ன சத்தம் இந்த நேரம்' படத்தின் மூலம் ஜெயம் ராஜா, நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பெண் குழந்தைகள் நடித்திருக்கின்றன.
இந்த நான்கு குழந்தைகளின் அப்பாவாகத்தான் ஜெயம் ராஜா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மானு நடித்துள்ளார். இவர்களுடன் நித்தின் சத்யா, மாளவிகா வேல்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை குறு ரமேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.  நாகா என்பவர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியானது. இதையடுத்து  இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது இயக்குனர் ராஜா பேசுகையில், "எனது அப்பா தயாரிப்பாளராக இருந்ததால், சினிமாவில் நான் என்ன ஆகவேண்டும் என்று நினைக்கிறானோ, அதுவாக ஆகியிருப்பேன். ஆனால், நான் எனது இளமைக்காலத்திலேயே இயக்குனராக வேண்டும் என்று தான் நினைத்தேன், அதன்படி இயக்குனராகவும் ஆனேன். இருப்பினும் என்னை நடிக்க பலர் அழைத்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் நடிக்க விருப்பமில்லாத நான் இந்த படத்தில் நடித்ததற்கு காரணம் இந்த நான்கு குழந்தைகள் தான்.

இவர்கள் இருக்கும் படத்தில் தானும் இடம்பெற வேண்டும் என்ற ஆசையில் தான் இந்த படத்தில் நடித்தேன். இந்த படத்தில் நடித்ததன் மூலம் நடிப்பு என்றால் எப்படி என்பதையும், நடிகர்களிடம் எப்படி வெளைவங்க்குவது என்பதையும் அறிந்துக்கொண்டேன். இப்படத்திற்குப் பிறகு நான் இயக்கம் படங்களில் நான் நடிகர்களிடம் வேலை வாங்கும் விதமே மாறியிருக்கிறது என்றெ சொல்லலாம். இந்த நான்கு குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு புதிய களத்தில் இயக்குனர் குருரமேஷ் திரைக்கதை அமைத்திருக்கிறார். இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும்." என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...