பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள லஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தனது
27வது படத்தை இன்று ஆரம்பித்தது. ஜெயம் ரவி நடிக்கும் இப்படத்தை சுராஜ்
இயக்குகிறார். இவர் தலைநகர், மருதமலை, மாப்பிள்ளை, படிக்காதன் ஆகியப்
படங்களை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் தொடக்க விழா இன்று பூஜையுடன் சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஜெயம் ரவி, சூரி, அஸ்வின், ஜெயம் ரவியின் தந்தையும், தயாரிப்பாளருமான
எடிட்டர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தற்போது ஜெயம் ரவி, அவருடைய அண்ணனான ஜெயம் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் 'ரோமியோ ஜூலியட்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதில் ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். தற்போது மூன்றாவது படமாக லஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தில் நாயகியாக முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க உள்ளனர். மேலும் இதில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...