Advertisement

Monday, June 16, 2014

ராய் லட்சுமி ஆன லட்சுமி ராய்

நடிகைகள் பெயர் மாற்றுவது புதிய விஷயம் இல்லை என்றாலும், நடிகை லட்சுமி ராய் இதையே கொஞ்சம் வித்தியாசமாக செய்திருக்கிறார். ஆம், லட்சுமி ராய் என்ற தனது பெயரை தற்போது ராய் லட்சுமி என்று மாற்றிக்கொண்டிருக்கிறார்.

இனி, அவர் நடிக்கும் படங்களில் அவருடைய பெயர் லட்சுமி ராய் என்று தான்
இடம்பெறும்.

இது குறித்து கூறிய ராய் லட்சுமி, "தற்போது ஆக்ஷன் படங்களிலேயே நான் அதிகமாக நடித்து வருகிறேன்.
லட்சுமிராய் என்கிற பெயர் அதற்கு பொருந்தாத மாதிரி மிகவும் பழமையான பெயர் மாதிரி இருக்கிறது. வீட்டில் யாரும் என்னை லட்சுமி என பெயர் சொல்லி அழைத்ததே இல்லை. ராய் என்றுதான் அழைப்பார்கள். அதனால் இப்படி மாற்றி இருந்துவிட்டுப் போகட்டுமே என வைத்தேனே, தவிர வேறு பெயரை மாற்றும் உத்தேசம் எனக்கு இல்லை." என்றார்.

தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை என்ற படத்திலும், புதுமுக இயக்குநரின் இரும்பு குதிரை படத்திலும் ராய் லட்சுமி நடித்து வருகிறார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...