Advertisement

Monday, June 16, 2014

இசையமைப்பதை விட நடிப்பது ஈஸி - விஜய் ஆண்டனி

இசையமைப்பாளராக வெற்றி பெற்ற விஜய் ஆண்டனி, 'நான்' படத்தின் மூலம் வெற்றி ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். இதையடுத்து தொடர்ந்து விஜய் ஆண்டனி 'சலீம்' என்ற படத்தில் நாயகனாக நடித்து, இசையும் அமைத்துள்ளார்.

பாரதிராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய என்.வி.நிர்மல் இயக்கியுள்ள இப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனி, ஸ்டுடியோ 9 சுரேஷ்,
ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் சரவணன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா, ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, ஜெயம் ராஜா, நடிகர் ஷாம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

இதையடுத்து சென்னை பிரசாத் லேபில் சலீம் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இதில் பேசிய விஜய் ஆண்டனி, "நான் படத்திற்கு பிறகு நான் நடிக்கும் இரண்டாவது படம் சலீம். இந்த படம் பெரிய பொருட்ச்செலவில், ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. ரம்ஜானுக்கு இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். இப்படத்தை இயக்கிய நிர்மல், ரொம்ப நல்ல மனிதர். மற்றவர்களிடம் திறமையை விட நல்ல குணங்கள் இருக்கிறத, என்று தான் நான் பார்ப்பேன். அது தான் முக்கியம், திறமையை கூட நாம் வளர்த்துவிடலாம், ஆனால், அவர்கள் நல்ல குணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில் நிர்மல் ரொம நல்ல மனிதர்.

இப்படம் நான் படத்தின் இரண்டாம் பாகமா? என்று கேட்கிறார்கள், இரண்டாம் பாகம் என்று நினைத்து நாங்கள் எடுக்கவில்லை, ஆனால், இரண்டாம் பாகம் போல உருவாகிவிட்டது.

இசையமைப்பதைக் காட்டிலும் நடிப்பது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, ரொம்ப ஈஸியாகவும் இருக்கிறது. பலருடன் பழக முடிகிறது. இதோ இங்கே, இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள், நடிப்பதால் தான் இவர்களிடம் பழக முடிகிறது, இசையமைப்பாளராக இருந்தால் இது முடியாது.

இங்கே இருப்பவர்கள் என்னை ரொம்ப புகழ்கிறார்கள். ஆனால், நான் அவ்வளவு பெரிய ஆள் கிடையாது. அவர்களை நான் அறிமுகப் படுத்தியதற்காக இப்படி பேசுகிறார்கள். மற்றபடி நானும் மற்ற மனிதர்களைப் போல தான், மற்றவர்களிடம் இருக்கும் கெட்ட பழக்கங்கள் என்னிடமும் இருக்கிறது." என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...