Advertisement

Monday, June 16, 2014

விஜய் டிவியின் புதிய தொடர்களுக்கான நட்சத்திர தேர்வு தொடங்கியது

சென்னை,ஜூன்.13  விஜய் தொலைக்காட்சியில் தொடங்க இருக்கும் புதிய தொடர்களுக்கான நட்சத்திர தேர்வுகளை விஜய் டிவி ஆரம்பித்துள்ளது.

இதற்காக 'நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ்' என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை தமிழ்கம் முழுவதும் விஜய் டிவி நடத்தி வருகிறது. அதன்படி, ஜூன் 14 மற்றும் 15ஆம்
தேதிகளில் இந்த நிகழ்ச்சி மதுரையில் நடைபெறுகிறது. இதில் பங்குபெற விரும்பும் நேயர்கள் தங்களது இரண்டு புகைப்படத்துடன், நேரடியாக வந்து பங்குபெறலாம். வயது வரம்பு கிடையாது. ஆண்கள் பெண்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம், கலந்துகொண்டு உங்கள் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி நீங்களும் ஆக்லாம் விஜய் ஸ்டார்ஸ்.

வரும் சனி மற்றும் ஞாயிறு காலை இதன் நேர்முகத் தேர்வு, வேலம்மாள் மொமோரியல் மெட்ரிகுலேஷன் உயர் நிலைப்பள்ளி, வேலாம்மாள் நகர், திருப்பாலை என்ற முகவரியிலும், சென்னையில் ஜூன் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் ஷ்ரைன் வேலாங்கன்னி சீனியர் பள்ளி, வளசரவாக்கம் என்ற முகவரியிலும், திருச்சியில் ஜூன் 28 மற்றும் 29ஆம் தேதிகளில், ஆல்ஃபா விஸ்டம் வித்யாஷ்ரம் சீனியர் பள்ளி, ஆல்ஃபா அவென்யூ, சுதானா நகர், கே.கே நகர் கிழக்கௌ எக்ஸ்டென்ஷன் என்ற முகவரியிலும் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் நிகழ்ச்சிக்கான தேர்வுகள் நடைபெறும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...