Advertisement

Sunday, June 15, 2014

பூலோகம் படத்தில் 35 நிமிடங்களுக்கு குத்துச்சண்டை காட்சிகள்!!

ஜெயம் ரவிக்கு நேரமே சரியில்லை போலிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே அவர் நடித்த படங்கள் எல்லாம் அநியாயத்துக்கு தாமதமாக வெளிவருகின்றன. அல்லது வெளிவரும்போது பிரச்னையில் சிக்கிக் கொள்கின்றன.
ஜெயம் ரவி நடித்த ஆதி பகவன் வருடக்கணக்கில் கிடப்பில் கிடந்தது. அதன் பிறகு ஒரு வழியாக வெளியாகி தோல்வியடைந்தது. சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் படம் வெளியானபோது பணப்பிரச்சனையில் சிக்கியதால் சில நாட்கள் கழித்தே வெளியானது.
தற்போது ஆஸ்கார்
பிலிம்ஸ் தயாரிப்பில் பூலோகம் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ஜெயம் ரவி. வட சென்னை பகுதியில் குத்துச்சண்டை வீரனாக உள்ள இளைஞன் பற்றிய கதை இது.
பூலோகம் படத்தின் முன்பாதியை படு கமர்ஷியலாக இயக்கி உள்ள இயக்குநர், இரண்டாம் பாதியில் சுமார் 35 நிமிடங்களுக்கு குத்துச்சண்டை காட்சிகளை வைத்திருக்கிறாராம்.
படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், 35 நிமிடங்களுக்கு குத்துச்சண்டையை மக்கள் பார்க்க மாட்டார்கள். தியேட்டரிலிருந்து எழுந்துபோய்விடுவார்கள்.
எனவே ரீஷூட் பண்ணியாவது காட்சிகளை மாற்றுங்கள் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம். இயக்குநர் கல்யாண கிருஷ்ணனுக்கு தயாரிப்பாளரின் கருத்தில் உடன்பாடில்லை.
கதைப்படிதான் நான் அந்த குத்துச்சண்டைகாட்சிகளை வைத்திருக்கிறேன். அதனால் ரீஷூட் பண்ண வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி இருக்கிறார். இந்தப் பிரச்சனை காரணமாகவே பூலோகம் படத்தை கிடப்பில் போட்டுவிட்டாராம் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...