Advertisement

Monday, June 16, 2014

ஜெயம் ரவியின் குத்துப் பாட்டுக்காக ரூ.1 கோடியில் செட்

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் தயாரித்து வரும் ரோமியோ ஜூலியட் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி இரண்டாவது முறையாக ஜோடியாகியுள்ள இப்படத்தில், மற்றொரு நாயகியாக பூனம் பாஜ்வா நடிக்கிறார். இவர்களுடன் வி.டி.வி.கணேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, எஸ்.செளந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்திற்காக சென்னை புரைவாக்கத்தில் பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்காக கலை இயக்குநர் மிலன் ரூ.1 கோடி மதிப்பில் வீடு ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த வீட்டில் தற்போது படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்கி வருகிறர்கள்.

விரைவில் அதே வீட்டில், ஜெயம் ரவி-ஹன்சிகா பங்கேற்கும் குத்துப்பாடல் ஒன்றை படமாக்க இருக்கிறார்கள்.

தீபாவளிக்கு முன்பே படத்தை திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...