Advertisement

Monday, June 16, 2014

எழுதி சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கு கிடையாது - இளையராஜா

எழுதி சாதிக்க வேண்டுமென்றோ, பிற விஷயங்களில் கவனம் செலுத்தி சாதிக்கவேண்டுமென்ற எண்ணமும் எனக்கு இல்லை, என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா நாளை (ஜூன் 3) தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக, குமுதம் பத்திரிகையும், இளையராஜா பேன்ஸ் கிளப் அமைப்பும் இணைந்து இன்று (ஜூன் 2) இளையராஜாவின் பிறந்தநாள் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற இவ்விழாவில், இயக்குநர்கள் பஞ்சு அருணாச்சலம், பாலா, சுகா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


இந்த விழாவில், குமுதத்தில் தொடராக வந்த இளையராஜாவின் கேள்வி பதில்களின் தொகுப்பான ‘இளையராஜாவைக் கேளுங்கள்’ எனும் புத்தகம் வெளியிடப்பட்டது. மேலும் 711 மரக்கன்றுகள் நடும் விழாவின் தொடக்க நிகழ்ச்சியாகவும் இவ்விழா அமைந்தது.

கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய இளையராஜ, மரக்கன்று நட்டு, மரக்கன்று நடும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, "இது பிறந்தநாள் விழா என்பதைவிட புத்தக வெளியிட்டு விழா என்றே சொல்லலாம். இவ்விழாவிற்கு வந்திருக்கும் பஞ்சு சார், பாலா, பார்த்திபன், ராமகிருஷ்ணன், சுகா அனைவருமே அவரவர் துறைகளில் சாதித்தவர்கள் தான். பொதுவாக அழைப்பிதழ்கள் அடித்து பிறந்தநாள் விழா கொண்டாடுவது எனக்குப் பிடிக்காது. ஆனால் இது புத்தக வெளியீட்டு விழாவோடு பிறந்தநாள் விழாவும் சேர்ந்த இந்த நாளில் உங்களை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி. எனக்கு எழுதி சாதிக்க வேண்டுமென்றோ, மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி சாதிக்க வேண்டுமென்றோ எண்ணம் கிடையாது.

அதேபோல, இங்கே வந்திருக்கும் பஞ்சு அண்ணனோ ஒரே சமயத்தில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் சரி, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் சரி கல்யாணராமன், ஆறிலிருந்து அறுபதுவரை என்ற இரண்டு படங்களை ஒரே சமயத்தில் இயக்கி, ஒரே வாரத்தில் ரிலீஸ் செய்து, இரண்டு படங்களையும் சக்சஸ் செய்தவர். கமலும், ரஜினியும் அவர்கள் வாழ்க்கையில் அதிக வெற்றிப் படங்களில் நடித்திருப்பது பஞ்சு அண்ணன் இயக்கத்தில் தான்.

எனவே அவர் இந்த விழாவிற்கு வருகை தந்து என்னை வாழ்த்தியது எனக்கு மகிழ்ச்சி. உங்களை சந்தித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி." என்று தெரிவித்தார்.

இளையராஜாவை 'அண்ணக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய பழம் பெரும் இயக்குநரும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலம் பேசுகையில், "நான் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளேன் என்பதோ, நான் ஒரு நல்ல தயாரிப்பாளர் என்பதோ, நான் ஒரு நல்ல வசனகர்த்தா என்பதோ, அல்லது நீண்ட காலம் சினிமாவில் இருந்ததோ எனது பெருமையாக நான் சொல்லமாட்டேன். நான்தான் இளையராஜாவை அறிமுகப்படுத்தினேன் என்பதே எனக்குக் கிடைத்த பெருமை.

ஒரு தாய் தன் மகனைக் கொஞ்சும்போது, அவனை கண்ணே!, மணியே! என்றுதான் கொஞ்சுவாள். அவனை வருங்கால முதல்வரே, என்றெல்லாம் புகழமாட்டாள். ஆனால் அந்தக் குழந்தை வளர்ந்த பிறகு சாதனைகள் செய்யும். அதுபோலத்தான் ‘அன்னக்கிளி’ படத்தில் நான் இளையராஜாவை குழந்தையாகத்தான் பார்த்தேன். அவர்தான் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு புகழ் பெற்று வளர்ந்துவிட்டார்.

எந்த ஒரு துறையிலும் ஒரு கட்டத்திற்கும் மேல் சலிப்பு வந்துவிடும். ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் ஆரம்பத்தில் இருந்தது போல இன்னும் சுறுசுறுப்பாக வேலை பார்ப்பார்கள். அந்த பாக்கியத்தை இளையராஜாவுக்குக் கொடுத்த கடவுளுக்கு என் நன்றிகள்" என்று

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...