Advertisement

Thursday, June 19, 2014

சண்டமாருதத்திலிருந்து அவ்னி மோடிக்கு பதில் ஓவியா நடிக்கிறார்

சரத்குமார் இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் சண்டமாருதம். ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். மேஜிக் பிரேமுடன் இணைந்து ராதிகா தயாரிக்கிறார். இந்தப் படத்தில் சரத்குமாருடன் அவ்னிமோடி, சரயு என்ற இரு ஹீரோயின்கள் நடிப்பதாக இருந்தது. தற்போது அவ்னிமோடி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஓவியா நடிக்க இருப்பதாக பட வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

குஜராத்தை சேர்ந்த அவ்னிமோடி நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நடித்தவர். தற்போது இரண்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார். அந்த படத்தின் தேதியும், சண்டமாருதம் தேதியும் ஒத்துவராததால் அவர் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.
அவ்னி மோடி அதிக சம்பளம் கேட்டதால் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சரத்குமார் சீனியர் நடிகர் அவருடன் நடித்தால் பிறகு இளம் ஹீரோக்கள் தங்களுடன் நடிக்க வைக்க தயங்குவார்கள் என்று சிலர் அவருக்கு எடுத்து சொன்னதாவும் அதனால் அவர் சம்பள பிரச்னையை காரணம் காட்டி விலகியதாகவும் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...