Advertisement

Tuesday, June 17, 2014

தமிழில் ரிலீசாகிறது டிரான்ஸ்பார்மர்ஸ்

புகழ்பெற்ற ஹாலிவுட் படமான டிரான்பார்மர்ஸ் ஏஜ் ஆப் எக்டின்க்ஸன் வருகிற 27ந் தேதி ரிலீசாகிறது. இது டிரான்ஸ்பார்மார் பட வரிசையில் 4 வது பாகமாகும். இதற்கு முந்தைய 3 பாகங்களிலும் நடித்த மனித கேரக்டர்கள் எதுவும் இதில் கிடையாது. எல்லாமே புதுமுகங்கள்தான். பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் வால்பெர்க் ஹீரோ.

முந்தைய பாகங்களில் ஆட்டோபார்ட்ஸ், டிஸ்சப்டிக்கான் என்ற இரண்டு வகை டிரான்பார்மர்கள் மட்டும் இருந்தது. இந்த பாகத்தில் டைனோபால்ஸ் என்ற மூன்றாது வகை டிரான்பார்மர்சும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டிரான்ஸ்பார்மர் பட வரிசையில் அதிக பட்ஜெட்டில் தயாராகி இருக்கும் படம் இது. இதுவரை இல்லாத அளவிற்கு கிராபிக்ஸ் பணிகளும் செய்யப்பட்டுள்ளது. 2டி, 3டி தொழில்நுட்பத்திலும் வெளிவருகிறது. இந்தியாவில் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீசாகிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...