Advertisement

Monday, June 16, 2014

முஸ்லீம் மதத்திற்கு மாறிய முன்னணி நடிகை - நடிப்பதை கைவிடுகிறார்

முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள மோனிகா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார். மதத்திற்கு மாறியது மட்டும் இன்றி, இனி திரைப்படங்களில் தான் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்துவிட்டார்.

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 'அழகி' படத்தின் மூலம் நாயகியான மோனிகா, சண்டைக்கோழி, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, பகவதி, இனிது இனிது காதல் இனிது, தாஸ், தொடக்கம், முத்துக்கு முத்தாக, மஞ்சபுரம், வர்மம், அகராதி என்று 50க்கும் மேற்பட்ட படங்களில் ஹோம்லியாக நடித்து வந்த இவர், 'சிலந்தி' என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து கோடம்பாக்கத்தையே அதிர வைத்தார். சிவப்பு கலர் புடவையில் இவர் காட்டிய அந்த கவர்ச்சிக்காக, மோனிகாவை தயாரிப்பாளர்கள் மொய்க்க, அம்மனியோ கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று
மறுபடியும் தங்கை உள்ளிட்ட சிறு சிறு வேடங்களிலும், பல தொலைக்காட்சி மற்றும் வெளிநாட்டு நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு காலத்தை ஓட்டினார்.

இதற்கிடையில், மோனிகா இஸ்லாம் மதத்திற்கு மாறிய செய்தியை அவரே, நேற்று அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்து கூறிவிட்டார்.

படமே இல்ல, இவங்க எதுக்கு இப்படி பிரஸ் மீட் வைக்குறாங்க!, என்று நாம் அவருக்காக காத்திருந்த போது, பர்தாவினால் முழுவதுமாக ஓடிய ஒரு உருவம் உள்ளே வந்தது. யார் என்று பார்த்தால் அது மோனிகா தான், எதற்கு இந்த கெட்டப் என்று யாம் கேட்கும் முன்பே, அவரே சொன்ன விஷயங்கள் இதோ,

என்ன பார்த்ததும் உங்களுக்கு ஆச்சரியமா இருக்கும்ம், ஆமாம் நான் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன். எனது அம்மா ஒரு கிறிஸ்டியன், எனது அப்பா இந்து, நான் தற்போது இஸ்லாம் மதத்திற்கு மாறியதால் எனது குடும்பத்தில் ஒரு தேசியமே இருக்கிறது என்று சொல்லலாம். நான் கடந்த 2010ஆம் ஆண்டிலேயே இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டேன். ஆனால், எனது குடும்பத்தினருடைய சம்மதத்திற்காக இத்தனை வருடங்கள் காத்திருந்தேன். தற்போது அவர்கள் "மதத்தை விட நீ தான் எங்களுக்கு முக்கியம், அதனால் உனக்கு எது விருப்பமோ அதை செய்" என்று சொல்லியதால், தற்போது அனைவருக்கு நான் இஸ்லாம் மதத்திற்கு மாறியதை அறிவிக்கிறேன்.

நான் ஒரு முஸ்லிம் பையனை காதலிக்கிறனோ அல்லது துபாயில் ஏதாவது பெரிய சேக்கை திருமணம் செய்துகொள்ளப் போகிறனோ, என்று உங்கள் மனதில் பல கேள்விகள் ஓடும் என்பது எனக்கு தெரியும், அப்படி ஏதும் இல்லை. எனது அப்பா இறந்த பிறகு, நான் சில பொது இடங்களுக்கு தனியாக செல்ல நேரிட்டது. அப்போது ஒரு சினிமா நடிகையை எப்படி மக்கள் பார்ப்பார்கள், அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது உங்களுக்கு தெரியும், சினிமா சம்மந்தமாக இருந்தால் சரி, அதை தவிர்த்து ஒரு கடைக்கு போவதென்றாலோ, இல்லை வெளியே போக வேண்டி இருந்தாலோ, தனியாக சென்றதால் பல கஷ்ட்டங்களை எதிர்க்கொண்டேன், அப்போது தான் பர்தா அணிந்துகொண்டு செல்ல தொடங்கினேன். அப்படி பர்தாவின் சென்ற போது எனக்கு எந்த தொல்லைகளும் ஏற்படவில்லை. நான் என்ன செய்ய நினைக்கிறனோ அதை சுதந்திரமாக செய்தேன்.

ஒரு கட்டத்தில் எனக்கு பர்தாவின் மீது ஒரு மறியாதையே வந்தது, பிறகு அந்த பர்தா இல்லாமல் வெளியே செல்லும் போது மீண்டும் கஷ்ட்டங்கள் ஏற்பட ஆரம்பித்தது. அப்போது தான் பர்தாவைப் பற்றியும்,  அதை முஸ்லீம் பெண்கள் அணிவது குறித்தும் தெரிந்துகொண்டேன், பிறகு இஸ்லாம் பற்றிய பல விஷயங்களை, இஸ்லாம் சமுதாய சகோதரர்களிடம் தெரிந்துகொண்டு அந்த மதத்திற்கு மாறினேன்.

நான் இதுவரை சம்பாதித்த பணம் அனைத்தும் நியாயமாக நடித்து சம்பாதித்தது. எந்த தவறான விஷயங்களையும் செய்து சம்பாதிக்கவில்லை. எனது சம்பாதியத்தில் சென்னையில் ஒரு சொந்த வீடு வாங்கியிருக்கிறேன், இது தான் எனது கனவாக இருந்தது. தற்போது அது நிறைவேறிவிட்டது. எனவே, இனி நான் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று முடிவு எடுத்துவிட்டேன். மேலும் விரைவில் திருமணமும் செய்து கொள்ளப் போகிறேன். தற்போது எனது உறவினர்கள் வெளியூர்களில் இருப்பதால், அவர்கள் வந்த பிறகு எனக்காக மாப்பிள்ளை தேடும் பணியை மேற்கொள்வார்கள்.

என்று நம்மிடம் மனம் திறந்து பேசிய மோனிகா இஸ்லாமிய பெயர், எம்.எச்.ரஹீமா.

குறிப்பு : தான் முஸ்லீமாக மாறியதையும், இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என்றதையும், மோனிகா மேடை போட்டு சொல்ல காரணம், அவரை படங்களில் நடிக்க சொல்லி பல தயாரிப்பாளர்கள் அனுகுகிறார்களாம். விஜய் சேதுபதி, நந்தா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களும் அனுகிறார்களாம். இப்படி ஒவ்வொருவரிடம் தன்னுடைய நிலையை கூறுவதை விட, மேடை போட்டு கூறிவிட்டால், யாரும் தன்னை இனி நடிக்க அழைக்க மாட்டார்கள், என்பதற்காக தான் மைக் பிடித்து தனது நிலையை விவரித்தாராம். (

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...