Advertisement

Monday, June 16, 2014

ஜூன் 12ஆம் தேதி 'அஞ்சான்' டிரைலர் ரிலீஸ்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் 'அஞ்சான்'. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் இந்தி நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ள படக்குழுவினர் அதற்காக விறுவிறுப்பாக இயங்கி வருகிறார்கள்.

இதற்கிடையில், படத்தில் டீசர் மற்றும் டிரைலரை வரும் ஜூன் 12 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...