Advertisement

Monday, June 16, 2014

பாலாவிடம் வாய்ப்பு கேட்ட முன்னணி நடிகர்கள்

இயக்குநர் பாலாவின் படங்கள் வியாபார ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், அவர் படங்களுக்கு என்று தமிழ் ரசிகர்களிடம் தனி வரவேற்பு உண்டு. இந்த வரவேற்பு ரசிகர்களிடம் மட்டும் இன்றி திரையுலகினர் மற்றும் ஹீரோக்களிடமும் உண்டு.

ஒரு படத்தை எடுக்க பாலா காலதாமதம் செய்தாலும், அவர் படத்தை தயாரிக்கவும், அவர் படத்தில் நடிக்கவும் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்.


அந்த வகையில், முன்னணி ஹீரோக்களான ஜெயம் ரவியும், ஷாமும் பாலாவிடன் படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டுள்ளனர்.

நேற்று நடைபெற்ற சலீம் பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஜெயம் ரவியின், சகோதரரும், இயக்குநருமான ஜெயம் ராஜா, தனது தம்பிக்கு பாலா சார் நடிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அதே போல நடிகர் ஷாம், பாலா சாரின் படத்தில் நடிப்பது என்பது தனது பெரும் கனவு என்றும், அதற்காக ஒரு கற்பனை கனவு கதையையும் மேடையில் விவரித்தார்.

இவர்களது கோரிக்கையை கேட்ட இயக்குநர் பாலா, விரைவில் இருவருக்கும் தனது படத்தில் வாய்ப்பு தருவதாக மேடையிலேயே உறுதியளித்தார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...