Advertisement

Monday, June 16, 2014

கோலிவுட்டுக்கு கிடைத்த புதிய அஜித், விஜய்

சென்னை,ஜூன்.11 (டி.என்.எஸ்) மூவி பஜார் நிறுவனம் சார்பில் கல்கி யுவா தயாரிப்பில் ராம்சுப்பாராமன் இயக்கியுள்ள படம்  'கண்டுபிடி கண்டுபிடி'. இதில் விஜய், அஜித், கார்த்திக் நடித்துள்ளார்கள். என்னடா இவர்கள் எப்படி சேர்ந்து நடித்தார்கள் என்று யோசிக்கிறீர்களா? இவர்கள் புதுவரவு மாஸ்டர்கள்.


மாஸ்டர் விஜய், மாஸ்டர் அஜித், மாஸ்டர் கார்த்திக், மாஸ்டர் பழனி என்ற நால்வர் இணைந்து நடித்துள்ளார்கள்.
திரைப்படங்களில் திருமணம் என்பது படத்தின் கடைசியில் சில மணித்துளிகள் வரும் காட்சியாகவே இருக்கும். ஒரு முழு திரைப்படக் கதையும் திருமணச் சூழலில் நடக்கும் படியாக இருந்தால் எப்படியிருக்கும் அப்படியொரு கலகலப்பான படம்தான் 'கண்டுபிடி கண்டுபிடி'.

படத்தின் முன்பாதியில் திருமண மண்டபம், மொய், விருந்து, திருமண சடங்குகள் போன்றவற்றை நகைச்சுவையுடன் விலாவாரியாக சொல்லியிருப்பது விலா நோக சிரிக்க வைக்கும்படி அமைந்துள்ளது. கலகலப்பாக போகும் கதையில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கும். அது கதையின் போக்கை எப்படி மாற்றம் செய்வது என்பதே மீதி கதை.

இப்படம் ஜூலை வெளியீட்டாக வெளிவருகிறது

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...