Advertisement

Monday, June 16, 2014

சமஸ்கிருதம் கற்றுக்கொண்ட விவேக்

காமெடி நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'நாந்தான் பாலா. இப்படத்தை கண்ணன் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.


இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ள விவேக், படத்தில் அனைத்து விஷயங்களும் உண்மைத் தன்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக, முறையாக சமஸ்கிருதம் பயின்றுள்ளார். பயின்றதோடு, டப்பிங்கில் சமஸ்கிருதத்தில் பேசி அசத்தியும் இருக்கிறார். இப்படம் ஒரு முழுநீள கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.

டிரிபிள் எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஜே.ஏ.லாரன்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 13ஆம் தேதி வெளியாகிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...