Advertisement

Monday, June 16, 2014

'திரிஷ்யம்' ரோஷன் தமிழில் அறிமுகமாகிறார்

சென்னை, ஜூன்.11  மோகன்லால், மீனா நடிப்பில் மலையாளத்தில் மாபெரும் வெற்றிப் பெற்று, வசூலிலும் சாதனைப் படித்தப் படம் 'திரிஷ்யம்'.

இப்படத்தில் மோகன்லால், மீனா நடிப்பு எப்படி ரசிகர்களை கவர்ந்ததோ, அதே போல மற்றொரு நடிகரின் நடிப்பும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. அவர் தான் ரோஷன். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரோஷனின் நடிப்பைப் பார்த்து, தற்போது
'திரிஷியம்' படத்திலும், தெலுங்கில் ரீமேக்காகும் திரிஷியம் படத்திலும் ரோஷனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் நடிகர் வெங்கடேஷ்.

ஒரே படத்தின் மூலம் மலையாளம், தெலுங்கு என்று பிஸியான ரோஷன், தற்பொது தமிழிலும் அறிமுகமாகிறார். அதுவும் ஹீரோவாக. ஆம், 'குபேரராசி' என்ற படத்தின் மூலம் ரோஷன் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

கருணாஸ் நடித்த 'சந்தமாமா' படத்தை இயக்கிய ராதாகிருஷ்ணன் தான் 'குபேரராசி' படத்தை இயக்குகிறார்.

காதல், மோதல், காமெடி என கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகும் இப்படத்தில் ரோஷன் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகிறார்.  (டி.என்.எஸ்)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...