Advertisement

Sunday, June 15, 2014

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்: டைட்டில் ஏன்? இயக்குனர் விளக்கம்

எங்கேயும் எப்போதும் சரவணனின் உதவியாளர் ராம் பிரகாஷ். தனிக்கடைபோட்டு இயக்கி வரும் படத்தின் பெயர் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’. செல்போன் கஸ்டமர் கேருக்கு போன் செய்தால் ஒலிக்கும் பெண்ணின் குரலையே படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.
அதற்கான காரணத்தை விளக்குகிறார் ராம் பிரகாஷ்.
“தலைப்பே மக்களை திரும்பி பார்க்க வைக்கிற மாதிரி இருக்கணும்னு முடிவு பண்ணினோம். அதே நேரத்துல கதைக்கும் தொடர்புடையதாக இருக்கணும். அதுக்குத்தான் இந்த தலைப்பு. இது டெலிபோன் தொடர்புடைய கதையல்ல. ஆனாலும் தலைப்பின் குரலால் படத்தில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழும்.
இயற்கை பேரழிவுகள் நம் கண்முன்னால் நடக்கிறது. கண்ணுக்கு தெரியாமல் நடக்கிற பேரழிவைப் பற்றிய கதை. அது என்ன என்பது சஸ்பென்ஸ். அட்டகத்தி தினேசும், நகுலும் ஹீரோக்கள், பிந்து மாதவியும் புதுமுகம் ஐஸ்வர்யாவும் ஹீரோயின்கள். காதல், ஆக்ஷன், த்ரில்லர் நிறைந்த கமர்ஷியல் கதை” என்கிறார் ராம் பிரகாஷ்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...