Advertisement

Saturday, June 14, 2014

நம்பர்கள் நடிக்கும் தமிழ் அனிமேஷன் படம்!

சேலத்தைச் சேர்ந்த பி.நிஷா என்ற பெண் 7 வருடம் கடுமையாக உழைத்து 0 2 9 (சீரோ டூ நையன்) என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கி இருக்கிறார். அவரே தயாரிப்பாளர், இயக்குனர், இதுபற்றி அவர் கூறியதாவது: அனிமேஷன் படித்திருக்கிறேன்.
வெளிநாட்டில் உருவாகும் அனிமேஷன் படங்களை சினிமாவிலும், டி.வியிலும் பார்த்து விட்டு நாம் ஏன் அப்படி உருவாக்ககூடாது என்று அது தொடர்பாக நிறைய படித்தேன்.
பொம்மை, விலங்குகள், மனிதர்கள்தான் அனிமேஷன்
படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நாம ஏன் அன்றாடம் பயன்படுத்தும் எண்களுக்கு உருவம் கொடுத்து, உணர்வு கொடுத்து ஒரு கதைய உருவாக்க கூடாது என்று நினைத்தேன். அதன் வெளிப்பாடாக சீரோ முதல் 9 வரையிலான எண்களுக்கு உயிர் கொடுத்து நடிக்க வைத்தேன்.
இந்த பத்து நம்பர்களும் ஒரு புதையலைத் தேடி செல்கின்றன. அப்போது அவர்களுக்குள் வரும் மோதல், ஈகோ, துரோகம், காதல்தான் கதை. கடைசியில் மனிதனுக்கு ஈகோ இருக்க கூடாது. ஈகோ இல்லாவிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை என்கிற மெசோஜோடு படத்தை முடிக்கிறேன்.
சுமார் 6 வருடங்களாக 150 கம்ப்பயூட்டர் நிபுணர்களுடன் இணைந்து இதனை உருவாக்கி இருக்கிறேன். இதனை வெளியிட முதலில் தயக்கம் இருந்தது. தற்போது கோச்சடையான் படத்துக்கு மக்கள் அளித்த ஆதரவைப் பார்த்ததும் வெளியிடும் தைரியம் வந்து விட்டது. தமிழ் தவிர பிற இந்திய மொழிகளிலும் டப் செய்ய இருக்கிறோம். என்கிறார் நிஷா.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...