Advertisement

Saturday, June 14, 2014

கோச்சடையான் வெற்றிப்படமா? தோல்விப்படமா?..! – தயாரிப்பாளர் விளக்கம்..!

150 கோடியில் தயாரிக்கப்பட்ட கோச்சடையான் படம், முதல் மூன்று நாட்களில் சுமார் 42 கோடி வசூல் செய்திருக்கிறது என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டது.
அதை வைத்து ரஜினியின் முந்தைய படமான எந்திரனின் வசூலை கோச்சடையான் மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கோச்சடையான் படம் வர்த்தக ரீதியில் தோல்வியைத் தழுவிவிட்டது என்று கூறி வருகிறார்கள்
திரைப்பட வியாபாரிகள்.
கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளி மனோகர் சொல்வதை பார்த்தால் திரைப்பட வியாபாரிகளின் கூற்று உண்மையோ என தோன்றுகிறது.
கோச்சடையான் படத்தின் வர்த்தக வெற்றி குறித்து வெளிப்படையாய் பேசி இருக்கிறார் தயாரிப்பாளர்.
“குறுகிய கால அவகாசத்திலும், குறைந்த பட்ஜெட்டிலும் கோச்சடையான் படத்தைத் தயாரித்தோம். எனவே படத்தில் சின்னச்சின்ன குறைகள் இருப்பது உண்மைதான். இப்போது படத்தைப் பார்க்கும்போது, இன்னும் நன்றாக பண்ணி இருக்கலாம் என்று தோன்றுகிறது. கோச்சடையான் அடுத்த பாகத்தில் அதிக சிரத்தை எடுத்து பணியாற்றுவோம்.
அதே சமயம், மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் என்பது இந்திய ரசிகர்களுக்கு புதிது. தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் படத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், ஹிந்தி ரசிகர்கள் இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
வட இந்தியாவில் கோச்சடையான் படத்திற்கு வரவேற்பு இல்லை என்பது உண்மைதான். தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்திக்கு போட்ட முதலீட்டை எடுக்க எதிர்பார்த்த நாட்களை விட அதிக நாட்கள் தேவைப்படும் என்று நினைக்கிறேன்.
ஆனால், நாங்கள் முதலீடு செய்த பணத்தினை எடுத்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறோம்” என்று சொல்கிறார் முரளி மனோகர்.
அப்ப கோச்சடையான் படம் ப்ளாப் என்று சொல்வது உண்மைதானோ?

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...