Advertisement

Saturday, June 14, 2014

ரிலீசுக்கு பிறகும் கோச்சடையானுக்கு பிரச்னை தீரவில்லை

கோச்சடையான் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் கேளிக்கை வரி வசூலித்தது பற்றிய விவகாரம் கோர்ட்டில் இருக்கிறது. எர்ணாவூரைச் சேர்ந்த முத்தையா என்ற வழக்கறிஞர் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.
“தமிழ் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு 2011ம் ஆண்டு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தடை அமுலில் இருக்கும்போதே வணிகவரித்துறை
கடந்த மே மாதம் 12ந் தேதி அன்று கோச்சடையான் படத்துக்கு வரிவிலக்கு சலுகை வழங்கி உள்ளது. இது கோர்ட்டை அவமதிக்கும் செயல்” என்று அவர் தனது மனுவில் தெரிவித்திருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘கோச்சடையான்’ படத்துக்கு வரிவிலக்கு அளித்தது சரிதான். எனவே கோச்சடையான் படம் பார்க்க வரும் பொதுமக்களிடம் கேளிக்கை வரியை வசூலிக்க கூடாது” என்று தியேட்டர் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை ஒரு சில தியேட்டர்கள் தவிர பெரும்பான்மையான தியேட்டர்கள் பின்பற்றவில்லை என்று மனுதாரரின் வழக்கறிஞர் ரவீந்திரன் என்பவர் கோர்ட்டில் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் இதுபற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டனர். வழக்கு இன்றும் (ஜுன் 4) விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...