Advertisement

Saturday, June 14, 2014

லேப்டாப்பை அடுப்பில் வைத்த ராஜ்கிரண்..! மஞ்சப்பை ஹைலைட்ஸ்!

இயக்குநர் சற்குணம் தயாரிப்பில் விமல் நடித்துள்ள படம் – மஞ்சப்பை. தன் உதவியாளரை இயக்குநராக்கி சற்குணம் தயாரித்துள்ள இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதிசாமி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
ஜூன் மாதம் ஆறாம் தேதி இப்படம் வெளியாகிறது. பல படங்களில் கதாநாயகனாகவும், சண்டைக்கோழி போன்ற சில படங்களில் அப்பா வேடத்திலும் நடித்த
ராஜ்கிரணுக்கு மஞ்சப்பை படத்தில் புரமோஷன் கொடுத்திருக்கிறார்கள். விமலுக்கு தாத்தாவாக நடித்திருக்கிறார் ராஜ்கிரண்.
மஞ்சப்பை படத்தில் விமல் கதாநாயகனாக நடித்திருந்தாலும் ராஜ்கிரணுக்குத்தான் அதிக முக்கியத்துவம். அதாவது தாத்தா பேரனுக்கு இடையிலான பாசம்தான் மஞ்சப்பை படத்தின் கதையே..! அனாதையான விமலை எடுத்து வளர்க்கிறார் ராஜ்கிரண். விமல் பெரியவனாகி சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது அவரது கனவு.
இந்நிலையில் சென்னையில் உள்ள பேரன் விமலை பார்க்க வருகிறார் ராஜ்கிரண். ஒருமுறை பீச்சுக்கு சென்றபோது பிரட் டோஸ்டரை வைத்து பிரட் டோஸ்ட் செய்வதைப் பார்க்கும் ராஜ்கிரணுக்கு, வீட்டில் உள்ள விமலின் லாப் டாப் பிரட் டோஸ்டர் போலவே தெரிகிறது.
ஒருநாள் அவருக்கு பசியெடுக்க, பிரட்டை எடுத்து லாப்டாப் உள்ளே வைக்கிறார். பிரட் டோஸ்ட் ஆகாதது கண்டதும், ஸ்டவ் அடுப்பை வைத்து அதன் மீது லாப் டாப்பை வைத்துவிடுகிறார். லாப் டாப் எரிந்துபோகிறது.
இதனால் விமலின் அமெரிக்க பயணம் ரத்தாகிறது. அதனால் தன் தாத்தாவை வெறுக்கும் விமல், அவரது அவரது அருமை புரிந்து தாத்தாவிடம் சேருவதுதான் மஞ்சப்பை படத்தின் கதை.
பாட்டி பேத்தி பாசத்தை வைத்து பல வருடங்களுக்கு முன் வெளியான பூவே பூச்சூடவா படத்தைப் போல், தாத்தா பேரனின் பாசத்தை சொல்லும் மஞ்சப்பை படமும் பெரிய வெற்றியடையும் என்று நம்புகிறார்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...