Advertisement

Friday, June 13, 2014

காற்று (மட்டும்) உலவும் கவுதம் கார்த்திக் வீடு

முன்னணி ஹீரோக்களின் வாரிசு என்பது நுனி கிளையில் உட்கார்ந்திருப்பது மாதிரி ஆபத்தான வேலை.
எப்போது விழுவோம் என்பதும் தெரியாது. எப்போது அது வளைந்து கொடுத்து காப்பாற்றும் என்பதும் தெரியாது. கடந்த சில வாரங்களாக இந்த தொல்லையை நன்றாகவே அனுபவித்து வருகிறாராம் கவுதம் கார்த்திக். இவர் நடித்த முதல் படமான கடல், தமிழ்சினிமாவில் மிகப்பெரிய டிசாஸ்டர் ஆனது. அந்த படம் வெளியாவதற்கு முன்பு
வரை, கவுதமின் அப்பா கார்த்திக்கை தொல்லை செய்து கொண்டிருந்த படாதிபதிகள் அத்தனை பேரும், இந்த தம்பி சரிப்படாது... என்று எடுத்தார்கள் ஓட்டம்.
இருந்தாலும், அப்பாவின் துறுதுறுப்பு அப்படியே மகனுக்கு என்கிற மாதிரி, வெற்றி தோல்விகளை பற்றி அஞ்சாமல் அதே சுறுசுறுப்பு ப்ளஸ் மகிழ்வோடு இருந்தார் மகன். தினந்தோறும் கதை கேட்பது. புதிய இயக்குனர்களை வரவழைத்து பேசிக் கொண்டிருப்பது என்று அப்பாவுக்கு நல்ல குவாலிட்டிஸ் அத்தனையும் வந்தது கவுதமுக்கு. அவரது இரண்டாவது படம் என்னமோ ஏதோ. இந்த படத்தின் ரிலீஸ் வரைக்கும் மீண்டும் அவரை கொத்தி பிடுங்கியது ஒரு கூட்டம். அடுத்த படம் எங்க கம்பெனிக்குதான். சம்பளம் ஒரு கோடி வரைக்கும் தர தயார் என்றெல்லாம் துரத்தினார்கள். இப்போது அதற்கும் கேடு.

அந்த படத்தின் தோல்விக்கு பிறகு, கவுதம் கார்த்தியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. வருகிற ஒன்றிரண்டு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களையும் அவரே விரட்டி விட்டுவிடுவார் போலிருக்கிறது. படம் ஓடலை. உண்மைதான். அதுக்காக கம்மி சம்பளத்திற்கு என்னை கமிட் பண்ண வந்திங்கன்னா... ஸாரி என்கிறாராம்.

அதற்காக ஒரு கோடி கொடுக்கிற அளவுக்கு யாரும் ஏமாளிகள் இல்லையே? வெறிச்சோடுகிறது வீடு....

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...