Advertisement

Sunday, June 15, 2014

கடந்த காலத்தின் எதிர்காலம்: எக்ஸ்மேன் 6 படத்தின் தமிழ் டைட்டில்!

இப்போதெல்லாம் ஹாலிவுட் படங்கள் எல்லாமே 3டி வெர்சனிலும் வெளிவரத் தொடங்கி விட்டது. அந்த வரிசையில் வருகிற 23ந் தேதி வெளிவர இருக்கும் எக்ஸ்மேன் டேய்ஸ் ஆப் தி பியூச்சர் பாஸ்ட் என்ற படமும் 3டியில் வெளிவருகிறது. எக்ஸ்மேன் பட வரிசையில் இது 6வது எபிசோட்.
இந்தப் படம்தான் அதிக பட்ஜெட்டில் நவீன தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது.
முந்தைய எக்ஸ்மேன்களில் நடித்த ஹக் ஜாக்மேன்தான் இதிலும் நடித்திருக்கிறார். அதே மேக்அப் அதே கையில் முளைக்கும் இரும்பு நகங்கள் என கலக்கப்போகிறார். நினைத்த உருவத்துக்கு மாறும் வில்லனாக ஜெனிபர் லாரன்ஸ் நடித்துள்ளார். இருவரும் மோதும் காட்சிகள் இதுவரை இல்லாத அளவுக்கு பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.
கற்பனைக்கு எட்டாத கதையை நினைத்து பார்க்க முடியாத தொழில்நுட்பத்தில் தந்து மிரள வைக்கப்போகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் எக்ஸ்மேன் தமிழ் பேசப்போகிறார் என்பது கூடுதல் தகவல். படத்திற்கு கடந்த காலத்தின் எதிர்காலம் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...