Advertisement

Sunday, June 15, 2014

நஸ்ரியாவை உளவு பார்க்க உளவுப்படையை அனுப்பிய நடிகை!

கேரளத்திலிருந்து கோலிவுட் வந்த இளம் நடிகைகளில், முன்னணி நடிகை என்ற இடத்தைப் பிடித்ததோடு அல்லாமல், தற்போது செமத்தியாய் பணத்தை அறுவடை கொண்டிருப்பது இரண்டு நடிகைகள்தான்.
ஒருவர்…லட்சுமி மேனன், மற்றொருவர்..நஸ்ரியா! தனக்கு பிறகு தமிழ்ப்படங்களில் நடிக்க வந்த நஸ்ரியாவுக்கு, தன்னைவிட அதிகமான மார்க்கட் வேல்யூ இருப்பதை அவரது
போட்டியாளரான லட்சுமிமேனனால் அத்தனை எளிதில் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை போலிருக்கிறது.
நஸ்ரியாவின் வெற்றிக்கான காரணம் என்ன? என்ற அவரது தொழில் ரகசியத்தை தெரிந்து கொள்ள துடியாய்துடித்துக்கொண்டிருக்கிறாராம் லட்சுமி மேனன்.
எனவே அதை தெரிந்து கொண்டு வந்து சொல்லும்படி தன்னிடம் வேலைபார்ப்பவர்களிடமும், தான் நடிக்கும் படத்தின் அஸிஸ்டெண்ட் டைரக்டர்களிடமும் அசைன்மென்ட் கொடுத்திருக்கிறாராம் லட்சுமி மேனன்.
அவரது உத்தரவின்படி, நஸ்ரியா என்ன செய்கிறார்? அவருக்கு எத்தனை படங்கள் கமிட்டாகி உள்ளன? எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? உட்பட நஸ்ரியாவைப் பற்றிய சகல தகவல்களையும் ஒன்றுவிடாமல் திரட்டி வருகிறது லட்சுமிமேனனின் உளவுப்படை.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...