Advertisement

Friday, June 13, 2014

7 வருடங்களுக்கு பிறகு கன்னடத்தில் ரீமேக் ஆகிறது சென்னை-28

2007ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்குனராக அறிமுகமான படம் சென்னை-28. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் தயாரித்திருந்தார். சூப்பர் ஹிட்டான இந்த
ப் படத்தின் மூலம் வெங்கட்பிரபு, நடிகர்கள் ஜெய், மிர்சி சிவா, பிரேம்ஜி, விஜய் வசந்த், நடிகை விஜயலட்சுமி ஆகியோர் சினிமாவிற்கு வந்தார்கள்.
இந்தப் படம் 7 வருடங்களுக்கு பிறகு கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. பெங்களூர்-560023 என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பிரதீப் ராஜ் இயக்குகிறார்.
ஜெய் கார்த்திக், துருவ், ராஜீவ், சந்தன், சஞ்சனா, ஷிவானி நடிக்கிறார்கள். இதில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் கர்நாடக அணிக்காக கிரிக்கெட் விளையாடியவர்கள், கிளைமாக்ஸ் தவிர மற்ற படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்துவிட்டது. விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...