Advertisement

Friday, June 13, 2014

லட்சுமி மேனனும் பாடகியானார்…!

அந்தக் காலத்தில் எல்லாம் பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே நடிகையாவார்கள். அதன் பின் பின்னணிக்கு என்று தனியாக கலைஞர்கள் வந்த பின் நடிக்கத் தெரிந்தால் மட்டும் போதும் என்ற நிலை வந்தது.
ஆனால், இப்போதெல்லாம் நடிக்கத் தெரியாதவர்கள் கூட நடிகையாக வந்து விட்ட நிலையில், சில நடிகைகள் பாடகியாகவும் மாற ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், அதில் ஒரு சிலர் நன்றாகவும் பாடி பாடலையும் ஹிட்டாக்கி விடுவதுதான் ஆச்சரியம்.
அப்படி சமீபத்தில் ஹிட் பாடலைப்
பாடியவர் நடிகை ரம்யா நம்பீசன். ‘பாண்டிய நாடு’ படத்தில் இமான் இசையில் அவர் பாடிய ‘ஃபை ஃபை கலாச்சி ஃபை’ பாடல் சூப்பர் ஹிட்டாகியது. அந்த பாடலுக்கு அசத்தலான நடனமாடியவர் நடிகை லட்சுமி மேனன். இப்போது லட்சுமி மேனனை பாடகியாக்கியிருப்பதும் இசையமைப்பாளர் இமான்தான்.
விமல், பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடிக்க கண்ணன் இயக்கி வரும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் நடிகை லட்சுமி மேனனனைப் பாட வைத்திருக்கிறார் இமான். இந்தப் பாடல் ரம்யா நம்பீசன் பாடியதைப் போல ஹிட்டாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தொடர்ந்து மலையாள நடிகைகளைப் பாட வைப்பதில் இமானுக்கு என்ன ஆசையோ…என்கிறது வழக்கமான கிசுகிசுவை கிளப்பும் கூட்டம். இப்படி நடிகைகளை பாட வைத்து வழக்கமான பாடகிகளின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடறாரே என்றும் பேசிக் கொள்கிறார்களாம்.
இது முற்றிலும் விளம்பரத்திற்காகவே செய்யப்படும் ஒரு விஷயம், நல்ல பாடல்கள் வேண்டுமென்றால் முறையாகப் பயிற்சி பெற்றவர்களை அல்லவா பாட வைக்க வேண்டும் என்றும் அவர்கள் புலம்புகிறார்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...