Advertisement

Saturday, June 14, 2014

பெயரை மாற்றினார் லட்சுமிராய்!

கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பெல்காம் அழகி லட்சுமிராய். சினிமாவுக்கு வந்து 10வது ஆண்டை நெருங்கினாலும் இன்னும் அவரால் முன்வரிசைக்கு வர முடியவில்லை.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் 50 படத்துக்கு மேல் நடித்துவிட்டார். கிரிக்கெட் வீரர் டோனி, ஸ்ரீசாந்துடன் நெருக்கம், பெங்களூர் அரசியல் புள்ளியுடன் தொடர்பு என அவரைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள்தான் வந்ததே
தவிர படங்கள் வரவில்லை.
இதனால் தனது குடும்ப ஜோதிடரின் ஆலோசனைப்படி தனது பெயரை ராய் லட்சுமி என்று திருப்பி போட்டிருக்கிறார். தற்போது ஆக்ஷன் படங்களில் நடித்து வருவதால் இந்த பெயர்தான் ஸ்டிராங்காக இருப்பதாக அவர் கூறுகிறார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: இதனை பெயர் மாற்றம் என்று சொல்ல முடியாது, சின்ன திருத்தம் அவ்வளவுதான். ராய் என்பதின் ஆங்கிலத்தில் கூடுலாக ஒரு ஏ வும் சேர்த்திருக்கிறேன். என்னை வீட்டில் எல்லோரும் ராய் என்றுதான் கூப்பிடுவார்கள்.
எனது அப்பா, ராயை முதலாவதாக போட்டுக் கொள் என்று ரொம்ப நாளாகவே சொல்லி வந்தார். அதற்கு இப்போதுதான் நேரம் வந்திருக்கிறது. ராய் என்பது எங்கள் குடும்ப பெயர் அதனை முதலில் போட்டுக் கொள்வது என் குடும்பத்தை கவுரவப்படுத்துகிற மாதிரியும் இருக்கும் என்பதால் இந்த முடிவு.
பெயர் மாற்றத்துக்கு பிறகு வாழ்க்கையிலும் சில மாற்றங்கள் நடந்திருப்பதை உணர்கிறேன். தற்போது இரும்பு குதிரை, அரண்மணை என்ற இரண்டு தமிழ் படத்திலும், மூன்று மலையாளப் படத்திலும், ஒரு கன்னட படத்திலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறேன். கைவசம் இப்போது 7 படங்கள். என்கிறார் பெருமையாக ராய் லட்சுமி.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...