Advertisement

Saturday, June 14, 2014

கமலை முந்துகிறார் வித்யாபாலன்: 12 வேடங்களில் நடிக்கிறார்

இந்தி நடிகை வித்யாபாலன் இன்றைக்கு இந்தியாவில் உள்ள நடிகைகளில் நடிப்பில் நம்பர் ஒண் இடத்தில் இருப்பவர். இவர் நடித்த படங்கள் ஜெயித்தாலும்,தோற்றாலும் இவர் நடிப்பு பேசப்படும். குறுகிய காலத்தில் தேசிய விருதுகள், பத்மஸ்ரீ விருது என புகழின் உச்சியில் இருக்கிறவர்.
இவர் தற்போது நடித்து வரும் பாபி சோசூஸ் என்ற படத்தில் 12 வேடங்களில் நடித்து வருகிறார். அதில் 6 வேடங்கள் ஆண் வேடம். பிச்சைக்காரர், டப்பா வாலா, மயிலாப்பூர் மாமி, இஸ்லாமிய இளைஞன், பஞ்சாப் சிங், ஜோதிடர்
என பல வேடங்கள் போடுகிறார்.
நவராத்திரி படத்தில் சிவாஜி 9 வேடங்களில் நடித்தார். கமல், தசாவதாரத்தில் 10 வேடத்தில் நடித்து அந்த சாதனையை முறியடித்தார். இப்போது வித்யாபாலன் இந்தப் படத்தில் 12 வேடங்களில் நடித்து கமலின் சாதனையை முறியடிக்கிறார்.
இதில் வித்யாபாலனுடன், அலி பைசல், கிரண்குமார், அர்ஜான் பாஜ்வா, ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சமர் சைஷ் இயக்கும் இந்தப் படம் ஜூலையில் ரிலீசாகிறது. ரிலையன்ஸ் எண்டர்டயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...