Advertisement

Friday, June 13, 2014

அஜீத்தின் 55வது படத்தின் தலைப்பு சத்யா.?!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்த ஆரம்பம் படத்திற்கு படப்பிடிப்பு முடிந்து படம் வெளியாக இருந்தபோதுதான் டைட்டிலையே அறிவித்தனர். அந்த அளவுக்கு டைட்டீல் விசயத்தில் அதிகமாக மெனக்கெட்டனர்.
இதனால் அஜீத்தின் ரசிக கோடிகள், பொறுமையை இழந்தனர்.
அதேபோல்தான் இப்போது கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் பட விசயத்திலும் ஏற்பட்டுள்ளது. ஆனபோதும், அந்த படத்தில் அஜீத் கேரக்டர் பெயர்தான் படத்தின் டைட்டீல் என்றொரு ஆறுதலான செய்தி இலைமறை காய்மறையாக வெளியாகியுள்ளது.
அந்த வகையில், அஜீத் நடிக்கும் கேரக்டரின பெயர் பற்றி விசாரித்தபோது, சத்யாதேவ். ஆனால், அவரை சத்யா என்றுதான் அழைப்பார்கள் என்று அப்படக்குழுவிடமிருந்து தகவல் வருகிறது.
ஆக, அஜீத்தின் 55வது பட டைட்டீல் சத்யா என்பதாகவே இருக்கலாம். ஆனாலும், கெளதம்மேனன் முறைப்படி அறிவிக்கிறபோதுதான் இது நூறு சதவிகிதம் உறுதியாகும். மேலும், சத்யா என்பது சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்த சூப்பர் ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...