Advertisement

Friday, June 13, 2014

எக்குத்தப்பாக எகிறி நிற்கும் சன்னி லியோனின் மார்க்கெட்!

இந்தி சினிமாவில் ஐஸ்வர்யாராய், வித்யாபாலன் உள்ளிட்ட சில முன்னணி நடிகைகள் கவர்ச்சிக்கு தடா போட்டு விட்டு பர்பாமென்ஸ் நடிகைகளாக உருவெடுத்திருப்பதால், சன்னி லியோனின் மார்க்கெட் எக்குத்தப்பாக எகிறி நிற்கிறதாம்.
அவர் படங்களில படு ஆபாசமாக நடிக்கிறார் என்று மாதர் சங்கங்கள் ஒருபக்கம் அவருக்கு எதிர்ப்பாக
கொடி பிடித்தபோதும, இன்னொரு பக்கம், அவருக்கான ஆண் ரசிகர்கள் ஆதரவு குரல் கொடுத்தபடி சன்னிக்கு எனர்ஜி கொடுத்து வருகிறார்களாம்.
இதற்கு முக்கிய காரணம், சமீபத்தில் சன்னியின் நடிப்பில் வெளியான ஜிசம்-2, ராகினி எம்எம்எஸ்-2, ஜாக்பாட் ஆகிய படங்கள் மட்டுமின்றி அதன் பாடல்களும் ஹிட் என்பதால், சன்னி நடித்த படங்கள் வெளியாகும் தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் 100 சதவிகிதம் என்ஜாய் பண்ணி படத்தை பார்த்து ரசிக்கிறார்களாம். இதனால் தியேட்டர்களில் வசூல் கொட்டுகிறதாம்.
அதனால், தற்போது அவர் நடித்துள்ள தினா அண்ட் லோலோ படத்தின் ஆடியோ உரிமத்துக்கும் நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதாம். இந்த படத்தில் சன்னி லியோன் கவர்ச்சி நடனம் புரிந்துள்ள பேபி டால் என்ற பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக அப்படத்தின் ஆடியோவுக்கே சில நிறுவனங்கள் போட்டிக்கோதாவில் குதித்திருக்கிறார்களாம்.
இப்படி குபீரென்று சன்னி லியோனின் மார்க்கெட் ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருப்பதால், அவர் தங்கள் படத்தில் முகம் காட்டினாலே படம் ஹிட்டாகி விடும் என்று அவரது கால்சீட் வேண்டிய பாலிவுட்டின் மெகா படாதிபதிகளும், டைரக்டர்களும் சன்னியை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளார்களாம்.
இதனால், அடுத்தபடியாக தென்னிந்திய படங்களிலும் முத்திரை பதிக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக திட்டமிட்டு வந்த சன்னி லியோன், மறுபடியும் இந்தி படங்களுக்கே அடுத்த ஆண்டு வரை கால்சீட்களை அள்ளிக்கொடுத்துள்ளாராம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...