Advertisement

Saturday, June 14, 2014

இனி நான் தமிழ்நாட்டுக்கு தாத்தா: ராஜ்கிரண் பெருமிதம்

தாத்தாவாக நடித்த மஞ்சப்பை படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து சந்தோஷத்தில் இருக்கிறார் ராஜ்கிரண். அந்த சந்தோஷத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டதில் இருந்து….
தவமாய் தவமிருந்து படத்தில் நடித்த பிறகு எல்லோரும் என்னை ஒரு தந்தையாகவே பார்த்தார்கள். எங்கு சென்றாலும்
அப்பா நல்லா இருக்கீங்களா? எங்க வீட்டுக்கு வாங்கப்பா என்றார்கள்.
மஞ்சப்பை பார்த்துட்டு தாத்தா நல்லா இருக்கீங்களான்னு கேக்க ஆரம்பிச்சிருக்காங்க. சின்னஞ்சிறு புள்ளைங்கல்லாம் போன் பண்ணி “தாத்தா சென்னை உங்களுக்கு வேண்டாம் எங்க கிராமத்து வீட்டுக்கு வந்துடுங்க”ன்னு போன் பண்றப்போ கண்ணீர் முட்டிக்கிட்டு வருது. எவ்வளவு அன்பு நிறைஞ்ச உலகம்னு நினைக்கிறப்போ நெகிழ்ச்சியா இருக்கு. நான் இனி தமிழ் நாட்டின் குழந்தைகளுக்கு தாத்தா.
எனக்கு சுத்தமா நடிக்கத் தெரியாது. அன்பு கோபம், ஏக்கம் எல்லோர் மனசுலேயும் இருக்கிறது. அதை டைரக்டர் சொல்றப்போ வெளிப்படுத்தினா அதுதான் நடிப்புன்னு சொல்றாங்க. நான் எந்த கேரக்டரையும் செலக்ட் பண்றதில்லை.
என்னை இப்படி பயன்படுத்திக்கணும்னு முடிவு பண்ணிக்கிட்டு டைரக்டர்ஸ் வர்றாங்க. அவுங்க சொல்றத நான் செஞ்சி கொடுக்கிறேன்.
சினிமா பெரிய மீடியா இதன் மூலமா மக்களுக்கு நல்லதும் சொல்லலாம். கெட்டதும் சொல்லலாம் எனக்கு சோறு போட்டது சினிமா.
அதை வச்சிக்கிட்டு மக்களுக்கு எப்படி கெட்டது சொல்ல முடியும். அதனாலதான் வில்லன் கேரக்டர் பண்றதுல்ல. அட ஏன் தம்பி சினிமாலகூட வில்லனா இருக்க பிடிக்கல தம்பி. வாழுற வரைக்கும் நல்ல மனுஷான வாழ்ந்துட்டு போவோமே சினிமாவுலேயும் சரி, நிஜத்துலேயும் சரி. என்கிறார் நெகிழ்ச்சியாக.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...