Advertisement

Saturday, June 14, 2014

ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடிக்கிறார் பிபாசா பாசு

ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பற்றி ஹாலிவுட்டில் நிறைய திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. தமிழில் சூர்யா நடிப்பில் மாற்றான், கன்னடத்தில், பிரியாமணி நடிப்பில் சாருலதா போன்ற
படங்கள் வெளிவந்துள்ளன.
தற்போது ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள் பற்றிய இந்திப் படம் ஒன்றை பூஷன் படேல் என்ற இயக்குனர் உருவாக்குகிறார். இந்தப் படத்தில் பிபாசாபாசு ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளாக நடிக்கிறார். படத்திற்கு அலோன் என்று தற்போது தலைப்பு வைத்திருக்கிறார்.
இது ஒரு தாய்லாந்து படத்தின் தழுவல். ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பற்றிய நிறைய திரைப்படங்கள் டாக்குமெண்டரிகளை பார்த்து பிபாசா நடிக்க பயிற்சி எடுத்து வருகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...