Advertisement

Saturday, June 14, 2014

தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிக்க மறுத்தது ஏன்?

சினிமாவைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் வந்த தனுஷ், இன்று நடிப்பில் பிச்சு உதறுகிறார். அதுபோலவே படத்தயாரிப்பு பற்றி ஒன்றும் தெரியாமலே படம் தயாரிக்க ஆரம்பித்தவர் இன்று வியாபாரத்தில் கரைகண்டவராகிவிட்டார்.
3 படத்தில் தன்னுடன் காமெடி வேடத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு தியேட்டரில் கைதட்டல் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அவரை ஹீரோவாக வைத்து எதிர்நீச்சல் படத்தைத் தயாரித்து பல கோடி லாபம் பார்த்தார்.
எதிர்நீச்சல் படம் வெற்றியடைந்ததும் அதே கூட்டணியை வைத்து டாணா படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார். படத்துக்கு பூஜை
போடுவதற்கு முன்பே டானாவை பிசினஸ் பண்ணி 10 கோடிக்கு மேல் லாபம் பார்த்தார்.
இதே ரூட்டில், விஜய்சேதுபதியை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க திட்டமிட்டார் தனுஷ். உதயநிதியின் மனைவி கிருத்திகாவை இயக்குநராக கமிட் பண்ணினார். பட வேலைகள் நடைபெற்று வந்தநிலையில் விஜய்சேதுபதி அப்படத்திலிருந்து விலகிவிட்டார். காரணம் மிக குறைவான சம்பளம் தருவதாக சொன்னாராம் தனுஷ். ஸாரி சொல்லிவிட்டார் விஜய்சேதுபதி.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...