Advertisement

Friday, June 13, 2014

பகத் ஜோடியாக நடிக்க மறுத்த நஸ்ரியா !

நடிகை நஸ்ரியா நசீம் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் மணிரத்னம் என்ற பெயரில் தயாராகும் மலையாளப் படத்தில் பகத்திற்கு ஜோடியாக நஸ்ரியா நடிப்பதாக இருந்தது.
இதனை சந்தோஷ் நாயர் இயக்குகிறார். நஸ்ரியாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் இந்தப்
படத்தில் இருந்து அவர் விலகிக் கொண்டார். அதனால் நஸ்ரியாவுக்கு பதில் நிவேதா நடிக்கிறார்.
இதுபற்றி இயக்குனர் சந்தோஷ் நாயர் கூறியிருப்பதாது: சமூகத்துக்காக போராடும் ஒரு பெண்ணின் கதை. அந்த கதைக்கு நஸ்ரியா பொருத்தமாக இருப்பார் என்பதற்காக அவரை ஒப்பந்தம் செய்திருந்தோம்.
அவரது திருமணம் நெருங்குவதால் அவரால் தேதி ஒதுக்கித் தரமுடியவில்லை. அதனால் நிவேதாவை நடிக்க வைக்கிறோம். அவரும் இந்த கேரக்டருக்கு பொருத்தமானவர்தான் என்கிறார்.
இந்தப் படத்தில் பகத் பாசில் கொச்சியில் கார் ஷோரூம் வைத்திருக்கும் ஜான் சாமுவேல் கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக நஸ்ரியா நடிக்க வேண்டும். திருமணம் நிச்சயிக்கப்பட்டலிருந்து திருமணம் ஆகிற வரை இருவருக்கும் உள்ள உறவை பற்றிய கதை.
நிஜத்திலும் பகத்தும், நஸ்ரியாவும் அப்படி ஒரு நிலையில் இருப்பதால் தேவையில்லாத சர்ச்சைகள் ஏற்படலாம் என்பதாலேயே நஸ்ரியா இந்தப் படத்தை தவிர்த்ததாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...